தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரும்பு மற்றும் நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு விவசாயிகள் சங்கங்கள் வரவேற்பு

10 Aug 2026, 9:26 pm
கரும்பு மற்றும் நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு  விவசாயிகள் சங்கங்கள் வரவேற்பு

கரும்பு மற்றும் நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு விவசாயிகள் சங்கங்கள் வரவேற்பு

சென்னை, ஆக. 10 - தமிழ்நாட்டில் 2025-26 பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் அரவை செய்யப்படும் கரும்புக்கு ஒரு டன்னுக்கு ஊக்கத்தொகையாக ரூ.709.50 வழங்கப்படும் எனச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்துள்ளதை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவை வரவேற்றுள்ளன.

கரும்பு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

இதுகுறித்துத் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன் விடுத்துள்ளஅறிக்கையில், ஒன்றிய பாஜக அரசு 9.5 பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.3290.50 மட்டுமேவிலை அறிவித்த நிலையில், தவெக அரசுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.710 சேர்த்து மொத்தம் ரூ.4,000 வழங்கிடக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சர் ர்களின் வாக்குறுதிப்படி முதல்முறையாக ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000விலை வழங்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், கடந்த 13 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில்கரும்பு சாகுபடியும் சர்க்கரை உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த ஊக்கத்தொகை சாகுபடிபரப்பளவை அதிகரிக்க உதவி புரியும் என்றார்.

மேலும், மூடப்பட்டுள்ள அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருப்பூர் மாவட்டம் அமராவதி, ஆம்பூர், என்.பி.கே.ஆர் ஆகிய நான்குகூட்டுறவு சர்க்கரை ஆலைகளைத் திறக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், திருத்தணி ஆலை உள்படபழமையான கூட்டுறவு ஆலைகளை முழுமையாகப் புதுப்பித்து மேம்படுத்த வேண்டும் எனவும்கேட்டுக்கொண்டார். அத்துடன், 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வருவாய் பங்கீட்டு முறைசட்டத்தை ரத்து செய்துவிட்டு, மாநில அரசின் பரிந்துரை விலையை (SAP) சட்டம் இயற்றி வழங்க வேண்டும் எனவும்அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

இதேபோல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில், சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரூ.289 ஆக உயர்த்தி அறிவித்துள்ளதன் மூலம் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,750-க்கும், பொது ரகம் ரூ.2,600-க்கும் கொள்முதல்செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள தை வரவேற்றுள்ளார்.உரம் மற்றும் டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வேளாண் உற்பத்திச் செலவுகள் பலமடங்கு அதிகரித்துள்ள சூழலில், நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத் தொகை உயர்த்தப்பட்டு இருப்பது விவசாயிகளின் உண்மையான சிரமங்களை உணர்ந்த செயலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில்அளித்த வாக்குறுதிப்படி, நெல்லுக்கும் கரும்புக்கும் கூடுதல் விலை வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஏற்கெனவே ரூ.6,000 கோடி வரை கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பு சட்டப்பேர வைக் கூட்டத்தொடரிலேயே தேர்தல் கால வாக்குறுதிப்படி மேலும்கூடுதலான கூட்டுறவு பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.