முந்தய பக்கம்

தமிழகத்தில் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம் அமல்: அரசாணை வெளியீடு!

1 Jul 2026, 10:39 pm
தமிழகத்தில் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம் அமல்: அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம் அமல்: அரசாணை வெளியீடு!

சென்னை, ஜூலை 1: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குப் பதி லாக, ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள ‘விக்சித் பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம்’ (விபி ஜி ராம் ஜி) தமிழகத்தில் புதனன்று முதல் அமலுக்கு வருவதாக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது. இடதுசாரிகள் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட பழைய 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் நோக்கில், 125 நாள் வேலை என்ற பெயரில் இப்புதிய திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளதாக விவ சாயத் தொழிலாளர்கள் நாடு முழு வதும் போராடி வருகின்றனர். இத் திட்டச் செலவில் 40 சதவீதத்தை மாநில அரசே ஏற்க வேண்டும் என ஒன்றிய அரசு நிபந்தனை விதித்து உள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

கிராமப்புற குடும்ப உறுப்பினர்களுக்கு ஆண்டிற்கு 125 நாட்கள் சட்டப்பூர்வ வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

நீர்வளப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட 4 பிரிவு களில் பணிகள் வழங்கப்படும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிடில் வேலை யில்லா உதவித்தொகை வழங்கப் படும்.

கூலி தாமதமானால் 16-ஆவது நாளிலிருந்து நாளொன்றுக்கு 0.05% இழப்பீடு வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் ஜியோ-டேக்கிங் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஒன்றிய அரசு 60% மற்றும் மாநில அரசு 40% என்ற விகி தத்தில் நிதி வழங்கும் எனக் கூறப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram