முந்தய பக்கம்

தமிழக அரசுக்கு ரூ. 60,000 அபராதம்!

7 Jul 2026, 10:01 pm
தமிழக அரசுக்கு ரூ. 60,000 அபராதம்!
<p><strong>தமிழக அரசுக்கு ரூ. 60,000 அபராதம்!</strong></p><p> கோயம்புத்தூர், ஜூலை 7- கோவையில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் ஏற்பட்ட விசாரணைத் தொய்வுக்காக, சாட்சிகளின் பயணச் செலவுத் தொகையான 60 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியர் மூலம் அரசு வழங்க வேண்டும் என்று கோவை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பதவிக்காலம் முடிந்தும் புதிய வழக்கறிஞர்கள் முறைப்படி பொறுப்பேற்காததால் திங்களன்று கொலை வழக்கு உள்ளிட்ட 10 வழக்குகளின் விசாரணை பாதிக்கப் பட்டது. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி சிவக்குமார், கேர ளாவிலிருந்து வந்திருந்த மருத்துவர் மற்றும் திருவாரூரி லிருந்து வந்திருந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட சாட்சிகளின் பயணச் செலவுக்காக இந்த அபராதத்தை விதித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram