தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அரசு ஊழியர்கள் மாநிலம் தழுவிய தர்ணா!

29 Oct 2026, 10:48 pm
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அரசு ஊழியர்கள் மாநிலம் தழுவிய தர்ணா!

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அரசு ஊழியர்கள் மாநிலம் தழுவிய தர்ணா!

சென்னை, அக். 29 –காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை (அக். 28) அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தர் ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான விதிமுறைகளை வெளியிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்; ஒப்பந்த முறையை முழுமையாகக் கைவிட வேண்டும்; ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுபோல், அரசுப் பணியில் இருக்கும்போது காலமான ஊழி

யர்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் பணி ஒதுக்கீட்டை 25 சதவீதமாக அறிவிக்க வேண்டும்;

குளறுபடிகளுடன் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசேநடத்த வேண்டும்; சத்துணவு ஊழியர்களுக்குக் காலமுறை ஊதியம்வழங்கி, டாப்ஸ் உள்ளிட்ட பலன்களை அளிக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர்களின் 41 மாதப் பணிநீக்கக் காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்; எம்ஆர்பி செவிலியர்கள், மருத்துவ ஆய்வகநுட்பநர்கள், மருந்தாளுநர்கள், நுண்கதிர் வீச்சாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், இடைநிலைச் சுகாதாரப்பணியாளர்கள், கணினி உதவியாளர்கள், பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோரைக் காலமுறை ஊதியத்திற்குமாற்ற வேண்டும்; ஐடிஐகளில் பணியாற்றும் பிபிபி, இசிஓ பயிற்றுநர்கள் மற்றும் உதவியா ளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; 2005-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பணிமனை உதவி யாளர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தைப் பணிக்கால மாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 45 கோரிக்கைகளை முன்வைத்து,இந்த தர்ணாப் போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு வடசென்னைமாவட்டத்தலைவர் வை. சிவக்குமார், தென்சென்னை மாவட்டத் தலைவர் நா. வினோத்குமார் ஆகியோர் தலைமைதாங்கினர். மாநிலப் பொருளாளர் சா. டேனியல் ஜெயசிங்போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

வடசென்னை மாவட்டச் செயலாளர் மு. விவேகானந்தன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் என். ரமேஷ், மாவட்ட இணைச் செயலாளர் கே. மகேந்திரன் உள்ளிட்ட தோழமைச் சங்கத் தலைவர்கள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். வேலை வாய்ப்புத் துறைஊழியர் சங்கமாநிலத் தலைவர் ஜி. சுந்தரேசன் நிறைவுரையாற்றினார். வட சென்னை மாவட்டப் பொருளாளர் டி. ஏழுமலைநன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.