முந்தய பக்கம்

அரசு ஊழியர்களுக்கு நாளை ஊதியம்! – தமிழ்நாடு அரசு

yesterday
அரசு ஊழியர்களுக்கு நாளை ஊதியம்! – தமிழ்நாடு அரசு
<p>தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் முன்கூட்டியே நாளை (செப்.25) வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.</p><p>வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை அறிவிக்கப்பட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளை இணைக்கக் கூடாது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் செப். 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.</p><p>இதை தொடர்ந்து, இதனால் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை செப்டம்பர் 27ஆம் தேதி அனைத்துப் பொதுத்துறை மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் என்று ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது. </p><p>இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் முன்கூட்டியே நாளை (செப்.25) வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram