விலைவாசி உயர்வு: ஒன்றிய அரசைக் கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
27 May 2026, 9:23 pm

விலைவாசி உயர்வு: ஒன்றிய அரசைக் கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மே 27 - ஒன்றிய அரசின் தவறான பொருளா தாரக் கொள்கையினால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பொருட் கள், விவசாயப் பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை வடக்கு வட்டம் சார்பில் பனகல் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, அரசு ஊழியர் சங்க வடக்கு வட்டச் செயலாளர் அஜய்ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் தமிழ்வாணன் மற்றும் முன்னாள் மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் உரை யாற்றினர்.

மாவட்ட இணைச் செயலாளர் கரு ணாநிதி நிறைவுரையாற்றினார். வட்ட இணைச் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

கும்பகோணம் திருவிடைமருதூர் வட்டக் கிளை சார்பாக வட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன், நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணன், தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வுபெற்ற மருந்தாளுநர் சங்க பொதுச் செயலாளர் அ.விஸ்வேஸ்வரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்டத் தலைவர் ராஜ்மோ கன், ஓய்வூதியர் சங்க வட்டச் செயலாளர் உதயகுமார், பாலாஜி ஆகியோர் உரை யாற்றினர்.

கும்பகோணம் வட்டக் கிளை சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் வட்டச் செயலாளர் பிரபா கரன் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்ட இயக்கம் திருச்சிராப்பள்ளி மேற்கு, மணப்பாறை, மருங்காபுரி, திருவெ றும்பூர் , துறையூர் மற்றும் முசிறி ஆகிய வட்டக்கிளை தலைநகரங்களில் வட்டக் கிளை நிர்வாகிகள் தலைமையில் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்ட, வட்டக்கிளை நிர்வாகிகள், தோழமை சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்துத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு சங்கத்தின் வட்டத் துணைத் தலைவர் இரா.மணிகண்டன், வேப்பந் தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்கத்தின் வட்டத் தலைவர் இரா.சந்திர சேகர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு சங்கத்தின் வட்டச் செயலாளர் எஸ்.ஆசிக் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.அகஸ்டின், பள்ளி கல்வித்துறை ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சு.சர வணசாமி, சாலை பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ச.மகேந்திரன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் வட்டச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் த.ஸ்ரீதர் விளக்க உரை யாற்றினார். மாவட்ட தலைவர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் சிறப்புரை ஆற்றினார்.