தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போராடும் நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கத்தினர் ரூ.57,770 நிதி வழங்கினர்

16 May 2026, 10:05 pm
போராடும் நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக  அரசு ஊழியர் சங்கத்தினர் ரூ.57,770 நிதி வழங்கினர்
<p><strong>போராடும் நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கத்தினர் ரூ.57,770 நிதி வழங்கினர்</strong></p><p>மதுரை, மே 16- ​உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் (நொய்டா உள்ளிட்ட பகுதிகளில்) குறைந்த பட்ச கூலி, 8 மணி நேர வேலை, பெண்களுக்கான அடிப்படை வச திகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இந்த போ ராட்டத்தை ஒடுக்க 1500-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். பலர் மீது பொய் வழக்கு களும் போடப்பட்டுள்ளன. ​பாதிக்கப்பட்ட இந்த தொழிலா ளர்களின் குடும்பங்களை பாது காக்கவும், நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளவும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில மைய முடி வின்படி தமிழகம் முழுவதும் உண்டி யல் வசூல் நடத்தப்பட்டது. ​தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மதுரை மாவட்டக்குழு சார்பில் கடந்த மே 15 வரை பல்வேறு வட்டக் கிளைகளில் தீவிர பிரச்சாரமும் நிதி சேகரிப்பும் நடைபெற்றது. இதில் மேற்கு கிளையில் அதிகபட்சமாக ரூ.11,370, தெற்கு கிளையில் ரூ.11,160, கிழக்கு கிளையில் ரூ.10,050, வடக்கு கிளையில் ரூ.8,050, திருமங்கலத்தில் ரூ.5,370, வாடிப்பட்டியில் ரூ.4,470, உசி லம்பட்டியில் ரூ.4,260, பேரரையூரில் ரூ.1,540 மற்றும் மேலூர் கிளையில் ரூ.1,500 என மொத்தம் ரூ.57,770 நிதி திரட்டப்பட்டது. ​இந்த இயக்கத்தில் மாநிலச் செய லாளர் க. நீதி ராஜா , மாவட்டத் தலைவர் இரா. தமிழ், ​மாவட்டச் செயலாளர் க. சந்திரபோஸ், மாவட்டப் பொருளாளர் ஆ. பரமசிவன் மற்றும் சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டனர். வடமாநில தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் என்றும் துணையாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.