தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இடைக்கால ஓய்வூதிய அரசாணையில் முழு திருப்தி இல்லை!  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்!

21 Jun 2026, 11:04 pm
இடைக்கால ஓய்வூதிய அரசாணையில் முழு திருப்தி இல்லை!  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்!

இடைக்கால ஓய்வூதிய அரசாணையில் முழு திருப்தி இல்லை!  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்!

சென்னை, ஜூன் 21- தமிழக அரசின் இடைக்கால ஓய்வூதியம் குறித்த அரசாணையில் தங்களுக்கு முழுமை யான திருப்தி இல்லை என்றும், ஊழியர்களின் நலன் காக்க இதில் கூடுதல் முன்னேற்றங்கள் அவசியம் என்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்ற முன்வர வேண்டும் எனவும் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இது தொடர்பாகச் சங்கத்தின் மாநிலத் தலை வர் மு.பாஸ்கரன், பொதுச்செயலாளர் வெ.சோம சுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை யின் விரிவான தொகுப்பு வருமாறு:

அரசாணையின் குறைபாடுகளும் ஊழியர்களின் ஏமாற்றமும்

கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டத்திற்கு முறையான விதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அது வரை, அண்மையில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு இடைக்கால மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற் கான அரசாணையை (அரசாணை எண்: 111, நிதித்துறை) தற்போதைய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 30 சதவீத அடிப்படை ஊதியம் அல்லது 10 ஆயிரம் ரூபாயில் எது அதிகமோ அதனுடன் 60 சதவீத அகவிலைப்படியும் சேர்த்து இடைக் காலப் பணப்பயனாக வழங்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூகாலப் பயன்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில் இந்த அறி விப்பு வந்துள்ளது. இருப்பினும், இது ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய வில்லை. இந்த அரசாணையில் பணிக்கொடை, கம்யூடேசன், சிறப்பு கருணை ஓய்வூதியம் பற்றிய எந்தவொரு அறிவிப்பும் இல்லை. டாப்ஸ் திட்டத் தில் இடம் பெற்றிருந்த சில உத்திரவாதங்கள் கூட இதில் விடுபட்டுள்ளன.

தேர்தல் வாக்குறுதியும் வெள்ளை அறிக்கையின் முரண்பாடும்

பழைய ஓய்வூதியத் திட்டம் (CPS ரத்து) கோரி கடந்த 23 ஆண்டுகளாகப் போராட்டங்கள் நீடிக்கும் சூழலில், ‘டாப்ஸ் திட்டத்தை ஒழித்து, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்துப் பரிசீலிப் போம்’ என்று தவெக தனது தேர்தல் வாக்குறுதி யில் கூறியிருந்தது ஊழியர்களிடையே நம்பிக் கையை ஏற்படுத்தியது. ஆனால், அரசு தற்போது வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்துப் பேசவே இல்லை. மாறாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் தாராளமான பயன்கள்தான் ஓய்வூதியச் செலவினம் அதிகமாக இருப்பதற்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது ஊழியர்களை ஏமாற்ற மடையச் செய்துள்ளது. ஓய்வூதியம் என்பது கருணை அல்ல, அது அரசின் சமூகப் பொருளா தாரக் கடப்பாடு; அதற்கு நிதிச் சிரமங்களைக் காரணம் காட்டக் கூடாது என்பதே உச்ச நீதிமன்றத் தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நகரா’ வழக்கின் தீர்ப்பாகும் என்பதை அரசு உணர வேண்டும்.

ஒன்றிய அரசின் தலையீட்டு ஐயமும் போராட்ட எச்சரிக்கையும்

மாநில அரசின் கடன் வரம்புகளை மீறி ஓய்வூ தியத் திட்டங்களை அமலாக்கக் கூடுதல் கடன் பெறும்போது, இந்த டாப்ஸ் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தருமா என்ற ஐயத்தை அரசின் வெள்ளை அறிக்கையே எழுப்பியுள்ளது. மாநில அரசின் கொள்கை முடிவுகள் மீது ஒன்றிய அரசு தடை விதிக்க முனைந்தால், அதனைத் தமிழக அரசு எதிர்த்து உறுதியாகக் குரல் கொடுக்க வேண்டும். எனவே, தவெக அரசு தனது தேர்தல் வாக்கு றுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். டாப்ஸ் திட்டத்தைவிட மேம்பட்ட பயன்களையும் உள்ளடக்கிய புதிய அரசாணையை வெளியிட வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தனியாகவும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புடன் இணைந்தும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.