தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் அரசு ஊழியர் சங்க பேரவை வலியுறுத்தல்

7 hours before
அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் அரசு ஊழியர் சங்க பேரவை வலியுறுத்தல்

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் அரசு ஊழியர் சங்க பேரவை வலியுறுத்தல்

திருவண்ணாமலை, செப். 4-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை வெள்ளிக்கிழமை அன்று (செப்.04) கீழ்பென்னாத்தூரில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் மா.பரிதிமால்கலை ஞன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.மகாலிங்கம் துவக்க உரை யாற்றினார், மாவட்ட செய லாளர் க. பிரபு வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் ஜெ. ராஜா நிதி நிலை அறிக்கையும் வாசித்தனர்.

சிஐடியு நிர்வாகி கே. நாக ராஜன், ஓய்வு பெற்றோர் அமைப்பு மாவட்ட தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி, ஆரம்பப் பள்ளி ஆசிரி யர் கூட்டணி மாவட்ட செயலாளர் கோ. வேங்கடபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில தலைவர் மு. பாஸ்கரன் நிறைவுரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் ச. விஜயா நன்றி கூறினார்.

இதில், அரசு துறைக ளில் காலியாக உள்ள லட்சக்கணக் கான பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பெண் அரசு ஊழி யர்களுக்கு சிறப்பு சலுகைகள் அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களின் பணி சுமையை குறைக்கும் வகையில், அலு வலக பணி நேரத்திற்கு பின்பும், விடுமுறை நாட்களிலும் ஆய்வு கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.