தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நவ. 16 முதல் 11 முனைகளில் பிரச்சாரம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

4 Nov 2026, 8:58 pm
நவ. 16 முதல் 11 முனைகளில் பிரச்சாரம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

நவ. 16 முதல் 11 முனைகளில் பிரச்சாரம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

சென்னை, நவ. 4 –பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 16 முதல் பிரச்சார இயக்கம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, செவ்வாய்க்கிழமை (நவ. 3) சென்னையில் சங்கத்தின் பொதுச்செயலாளர் வே. சோமசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்; தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்து விதிமுறைகளை வெளியிட வேண்டும்; தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியம் மற்றும் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றும் ஊழியர்களைக் காலமுறை ஊதியத்தின்கீழ் கொண்டுவர வேண்டும்.

சத்துணவு ஊழியர்களைக் கொண்டு காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்; கருணை அடிப்படையிலான பணியிடங்களை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்; மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் நில அளவைத் துறைகளில் தனியார் நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாதப் பணிநீக்கக் காலத்தை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி பணிக்காலமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 45 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 16 முதல் 27-ஆம் தேதி வரை 11 முனைகளில் பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது.

இதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 4 அன்று சென்னையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்கும் பெருந்திரள் முறையீட்டுப் போராட்டம் நடைபெறும்.

தமிழ்நாடு அரசு, ஓஎம்சிஎல் (OMCL) வெளிமுகமை மூலம் அரசுப் பணிகளுக்கு ஊழியர்களை (அவுட்சோர்சிங் முறையில்) நியமனம் செய்யும் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும். பெரும்பான்மையான இளைஞர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, இளைஞர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது. 90 லட்சம் பேர் வேலைக்காகக் காத்திருக்கும் நிலையில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 17(ஏ) குற்றக் குறிப்பாணை யைத் திரும்பப் பெறுவதோடு, கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு அக்டோபர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அலுவலர் களுக்கு மதிப்பூதியத்தையும், எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்குமதிப்பூதியத்தையும் விரைந்து வழங்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் பாரம்பரிய உடை அணிய வேண்டும் என்ற அறிவிப்பை ஏற்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.