மின்துறையில் தனியார்மய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள தமிழக அரசு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டனம்
7 Aug 2026, 10:24 pm

மின்துறையில் தனியார்மய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள தமிழக அரசு

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டனம்

தமிழகத்தின் தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் முழு நிதிநிலைஅறிக்கையானது, எரிசக்தி துறையில் திமுக அரசைப் போன்றே தவெக அரசும்தனியார்மய பாதையைத் தேர்ந்தெடுத்து ள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர்தி.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மின்துறையில் எந்த வகையிலும் தனியார்மயத்தைஆதரிக்கமாட்டோம் என்று பதிலளித்த மின்துறை அமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும்அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மின்துறையில் தனியார்மய நடவடிக்கைகள்

எண்ணூர் அனல் மின் நிலையம் (ETPS) விரிவாக்கம்: அரசு மற்றும் தனியார் பங்களிப்பு (PPP) முறையில் ரூ.8,000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

மின்கல ஆற்றல் சேமிப்பு (BESS): எதிர்காலத்தில் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்ய உள்ள மின்கல ஆற்றல் சேமிப்பில் தனியார் அனுமதிக்கப்படுவது அரசு தனியார்மய பாதையில் செல்வதை உறுதிப்படுத்துகிறது.

ஸ்மார்ட் மீட்டர்கள்: சென்னை மாநகரில் உள்ள அனைத்து மின்நுகர் வோருக்கும் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் தொழில், வணிக நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன. மொத்த செலவுத் திட்டமான (Totex) இது 90 சதவீதம் தனியார்மயமே ஆகும். குறிப்பாக சென்னை முழுவதும் மின்வாரியம் தனியார்மயமாகும் அபாயம் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது மற்றும்அதுதொடர்பான 21 வகையான மின் இணைப்புபணிகளில் இருந்து மின்வாரிய பணி யாளர்கள் வெளியேற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அரசு மற்றும் தனியார் பங்களிப்பு திட்டங்கள்: கோயம்புத்தூர் - அரியலூர் (ரூ. 4,000 கோடிகள்) மற்றும் பசுமை எரிசக்தி வழித்தடம் Phase-II விருதுநகர் - கோயம்புத்தூர் (ரூ. 1,640 கோடிகள்) ஆகிய 765 கே.வி. உயர்மின் அழுத்த மின்பாதை திட்டங்கள், 178 துணை மின் நிலையங்கள் (ரூ. 1,543 கோடிகள்), 2000 பொது சார்ஜிங் நிலையங்கள் (ரூ. 50

கோடிகள்) ஆகியவை பிபிபி முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிதிநிலை அறிக்கையில் தனியார் பங்களிப்பு எத்தனை சதவீதம் என்பது குறிப்பிடப்படாதது சந்தேகத்தை அதிகரிப்பதாக மின் ஊழியர் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசிடம் நிதியில்லை என்றகாரணத்தைக் காட்டி தனியார்மய பாதைக்குச் செல்வதுவாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தைத்தருவதாகும் எனச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

கேரள அரசின் மாதிரியைப் பின்பற்ற கோரிக்கை

முந்தைய திமுக அரசு ஒன்றிய அரசின் அழுத்தத்திற்கு இணங்க ஸ்மார்ட் மீட்டர் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்தபோது தாங்கள் கடுமையாக எதிர்த்ததைச் சுட்டிக்காட்டியுள்ள மின் ஊழியர் மத்திய அமைப்பு, கேரள அரசு செய்தது போல ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக்கேபிடல்எலெக்சர் (CAPEX) முறையில் தமிழக அரசும் அமல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் எனக் குறிப்பிட்டுள்ளது.எனவே, மின்துறையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் மற்றும் பொது-தனியார் பங்களிப்பு உள்ளிட்ட அனைத்துக்தனியார்மய நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.