தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வர உத்தரவு

2 Jun 2026, 9:28 pm
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வர உத்தரவு
<p><strong>அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வர உத்தரவு</strong></p><p>சென்னை, ஜூன் 2 - தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி செய்ய சுகாதாரத் துறை புதிய உத்தர வுகளை பிறப்பித்துள்ளது. சில அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நேரங்களில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் முதலுதவி மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக வீடி யோக்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர் அல்லது செவிலியர் தகுதி இல்லாத தூய்மைப் பணியாளர்களை நோயாளிகளுக்கு ஊசி செலுத்தவோ, சிகிச்சை அளிக்கவோ அனுமதிக்கக் கூடாது என்று சுகாதாரத் துறை கடுமையாக உத்தரவிட்டுள்ளது. புதிய நடைமுறையின்படி, துறை மருத்துவர்கள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். மற்ற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், கண்கா ணிப்பாளர்கள் காலை 8 மணி முதல் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயாளி களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து மருத்துவப் பணியாளர்களும் பணி நேர த்தை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், விதிமீறல்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.