முந்தய பக்கம்

நீண்டகாலமாக மறுக்கப்பட்டவர்களுக்குப் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்

16 Jun 2026, 10:59 pm
நீண்டகாலமாக மறுக்கப்பட்டவர்களுக்குப்  பணியிட மாறுதல் வழங்க வேண்டும்

நீண்டகாலமாக மறுக்கப்பட்டவர்களுக்குப் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்

சென்னை, ஜூன் 16 - பணி இடமாறுதல் நீண்டகாலமாகக் கிடைக்காத கல்லூரி ஆசிரியர்களுக்குப் பணிமாறுதல் வழங்கும் வகையில் வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரி யர் கழகப் பொதுச்செயலாளர் சோ.சுரேஷ் கோரியுள்ளார்.

அவரது அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள 188 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த அரசாணை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம். அதேநேரம், 2015-க்குப் பிறகு ஆசிரியர்களுக்கு அரசு முறையான இடமாறுதல் வழங்கவில்லை. ஒரு துறையில் 50 சதவீதத்திற்கும் குறைவான ஆசிரியர்கள் இருந்ததைக் காட்டியும், கௌரவ விரிவுரையாளர்கள் உள்ள இடங்களைக் கணக்கில் கொள்ளாமலும் இடமாறுதல் மறுக்கப்பட்டது.

தற்போது 2,708 நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதால், காலியிடங்களுக்கு நிபந்தனையுமின்றி இடமாறுதல் வழங்க வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை உள்ள துறைகளில், புதியவர்கள் நியமிக்கப்பட்ட பின், இடமாறுதல் பெற்றவர்களை விடுவிக்கலாம் என்ற நிபந்தனையுடன் ஆணை வழங்கலாம். மேலும், 2 ஆண்டுகள் ஒரே கல்லூரியில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதியை நீக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram