தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்தை விரைவுபடுத்த கோரிக்கை

23 May 2026, 9:47 pm
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்தை விரைவுபடுத்த கோரிக்கை

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்தை விரைவுபடுத்த கோரிக்கை

சென்னை, மே 23- அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்தை விரைந்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரியுள்ளது.

இது தொடர்பாக அமைப்பின் பொதுச் செய லாளர் சோ.சுரேஷ் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழ கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டு களில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. ஆயிரம் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதே சமயம், 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு நிரந்தர ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட வில்லை. 2022 ஆம் ஆண்டு 4ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப அறி விப்பு செய்யப்பட்டது. வழக்குகள் காரணமாக பணி நியமன எண்ணிக்கை 2,708 ஆக குறைக்கப்பட்டு, 27.12.2025 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து 5 மாதங்களை கடந்த நிலையில் ஒற்றை இலக் கத்தில் மட்டுமே பணி நியமனம் நடந்துள்ளது

எனவே, உதவிப் பேராசிரியர் பணி நிய மனங்களை விரைந்து செய்ய வேண்டும். அதற்கு முன்பாக பணி இடமாறுதல் கலந் தாய்வு நடத்த வேண்டும்.

முதல்வர்கள் நியமனம்

நீதிமன்ற தடையின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்பட முடியாத நிலை இருந்தது. நீதிமன்றம் தடையாணையை விலக்கிக் கொண்டுள்ள நிலையில், முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதற்கான பணி இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண் டும்.

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரி யர்களை, பல்கலைக் கழக மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு (யுஎம்ஐஎஸ்), நான் முதல்வன் போன்ற பணிகளில் ஈடுபடுத்து வதை தவிர்க்க வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் காலியாக உள்ள நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங் களை நிரப்ப வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.