தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதம் மாறும் பிசி முஸ்லிம் இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

9 Jul 2026, 8:52 pm
மதம் மாறும் பிசி முஸ்லிம் இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

மதம் மாறும் பிசி முஸ்லிம் இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

சென்னை, ஜூலை 9 - பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற் படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதியினர் முஸ்லிம் மதத்திற்கு மாறும்போது, அவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களாகக் கருதி சாதிச் சான்றி தழ் வழங்கும் உத்தரவு ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

2004 அரசாணை

தமிழக அரசு கடந்த 2004-ஆம் ஆண்டு ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. அதில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதியினர் முஸ்லிம் மதத்திற்கு மாறும் போது, அவர்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களாகக் கருதிச் சாதிச்சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறியிருந்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு

இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற மது ரை அமர்வு, 2004 அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. ‘ஒருவர் இஸ்லா மிற்கு மாறினால் அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. பிறப்பின் அடிப்படையில் அமையும் குறிப்பிட்ட பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோர முடியாது’ என தீர்ப்பில் கூறப்பட்டது. இது இஸ்லா மியர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சி யை ஏற்படுத்தியிருந்தது.

மேல்முறையீடு

இந்நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மேல்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.