தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேவையான மேல்முறையீடு

9 Jul 2026, 9:16 pm
தேவையான மேல்முறையீடு

தேவையான மேல்முறையீடு

மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு பிற்படுத் தப்பட்டோர் இடஒதுக்கீடு வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று.

மதம் மாறிய இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவு சமூகநீதிக்கு எதிரானது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இத்தகைய சட்டத்தை கொண்டு வரப்போவதாக நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக கூட்டணி அரசு அவ்வப்போது கூறி வருகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல மைச்சராக இருந்தபோது இத்தகைய ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக இஸ்லாமி யர்களுக்கு 3.5 சதவீதம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி உள் ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இஸ்லாம் மதத்திற்கு மாறினால், அவர்களுக்கு பி.சி.முஸ்லிம் என இடஒதுக்கீடு வழங்க தமிழ் நாடு அரசு 2024 ஆம் ஆண்டு அரசு ஆணை பிறப்பித்தது. இந்த சலுகையைக் கோருவது தொ டர்பான ஒரு வழக்கில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுவதாக உயர்நீதி மன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதமாற்றத்தை தடை செய்யும் வகையி லேயே இந்த நீதிமன்ற உத்தரவு அமைந்துள் ளது எனலாம். இஸ்லாமியர்களில் சமூக, பொரு ளாதார வாழ்நிலை எந்தளவுக்கு பின்தங்கியுள் ளது என்பதை நீதிபதி ராஜேந்திர சச்சார் குழு விரிவாக விளக்கியுள்ளது. இஸ்லாமியர்க ளுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவது உள்ளிட்ட பரிந்துரையை அந்த குழு அளித்துள் ளது. இந்நிலையில், மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடைக்காது என்ற ரீதியிலேயே நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.

அரசாணை எண்.31 செல்லுபடியாகும் என சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத் தொடரி லேயே சட்டம் இயற்ற வேண்டும் என்று வலி யுறுத்தப்படுவதையும், தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக வரையறைப் படுத்தப்பட்ட ஒருவர் மதம் மாறுகிற போதும், அதற்கான இடஒதுக்கீட்டைக் கோருவது சமூக நீதியின் பாற்பட்டதேயாகும். ஒரு குறிப்பிட்ட நீதிபதி இத்தகைய சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி வருவதை இயல்பான ஒன்றாகக் கருத முடியவில்லை. நீதி என்பது சமூக நீதியின் சாயலிலிருந்து விலகி நிற்க முடியாது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.