முந்தய பக்கம்

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்!

27 Oct 2026, 9:27 pm
அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்!
<p><strong>அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்!</strong></p><p>சென்னை, அக்.27- அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’, ‘டி’ பிரிவுத் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 2025-26ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸாக 20 சதவீதம் வரை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>இலாபம் ஈட்டிய நிறுவனங்கள், மின் பகிர்மானக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆவின் இணையம் ஆகியவற்றில் 8.33% மிகை ஊதியம், 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% வழங்கப்படும். உபரித் தொகை இல்லாத நிறுவனங்களில் 10% வழங்கப்படும். நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ரூ. 3,000 கருணைத் தொகை கிடைக்கும். தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் ரூ. 8,400 முதல் ரூ.16,800 வரை பெறுவர். ஒட்டுமொத்தமாக 2.60 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ. 367.20 கோடி போனஸாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram