தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறப்பு மளிகைப் பொருட்கள் தொகுப்பு வராததால் ஏமாற்றம்

4 Nov 2026, 12:08 am
சிறப்பு மளிகைப் பொருட்கள் தொகுப்பு வராததால் ஏமாற்றம்

சிறப்பு மளிகைப் பொருட்கள் தொகுப்பு வராததால் ஏமாற்றம்

திருப்பூர், நவ.3-தமிழக அரசு ரூ.200-க்கு அத்தியாவசியமான 10 மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தைஅறிவித்துள்ளது. எனினும் திருப்பூரில் இத்திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில் இங்கு வசிக்கும்ஏழை மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில், ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 128 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் முதன்மைக் கூட்டுறவு கடைகள் மூலம் ரூ.200க்கு 10 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, புளி ஆகியவை தலா கால் கிலோ வீதமும், பூண்டு, மல்லி தலா 150 கிராம் வீதமும், காய்ந்த மிளகாய், உடைத்த உளுத்தம் பருப்பு, கடுகு உள்ளிட்ட பொருட்கள் தலா 100 கிராம்வீதமும், சீரகம், சோம்பு ஆகியவைதலா 50 கிராம் வீதமும் என 10 பொருட்களும் ஒரு சுற்றுச்சூழலுக்கு உகந்த பையில் தொகுப்பாக ரூ.200க்கு வழங்கப்படுகிறது.அரசின் அறிவிப்பு செய்தி வெளியானதை தொடர்ந்து திருப்பூரில் ரேசன் கடைகளில் மக்கள் ரூ.200 மளிகை தொகுப்பை ரேசன் ஊழியர்களிடம் கேட்கின்றனர். ஆனால்ரேசன் கடைகளில் இத்திட்டம் அமல்படுத்தவில்லை. மாறாக கூட்டுறவு பண்டகசாலைகளில்தான் அமல்படுத்தப்படுகிறது என்று ரேசன் ஊழியர்கள் தெரிவிப்பதால்ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து வளர்மதி கூட்டுறவு சங்க பொதுமேலாளர் புவனேஸ்வரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, அரசு மாநகராட்சி பகுதிகளில் இத்திட்டத்தை அமல்படுத்தவில்லை. எனவே திருப்பூரில் ரூ.200மளிகைப் பொருட்கள் தொகுப்புவழங்கும் திட்டம் செயல்படுத்தவில்லை. அதேசமயம், மாவட்டத்தில் உடுமலைப்பட்டை அர்பன் கூட்டுறவு பண்டகசாலையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.திருப்பூர் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, இத்திட்டத்தை செயல்படுத்துவதை மாநிலஅரசு தீர்மானித்தது. அவர்கள் மாநகராட்சி பகுதிகளை தவிர்த்து இதர கூட்டுறவு பண்டகசாலைகளில் அமல்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருப்பூர் வளர்மதிபண்டகசாலையை தவிர உடுமலைப்பேட்டை அர்பன் கூட்டுறவு பண்டகசாலைதான் உள்ளது. எனவேதான் அங்கு இத்திட்டம்செயல்படுத்தப்படுகிறது என்றார்.ரேசன் கடைகளில் இத்திட்டத்தை செயல்படுத்தாதது பற்றி கேட்டபோது, ஏற்கெனவே வழங்கும் ரேசன் பொருட்களுடன் இத்திட்டத்தை செயல்படுத்துவது சிரமம்,என்றார்.

திருப்பூரில் இத்திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில், நகர்ப்புறத்தில் இருக்கும் மிகப்பெரும்பான்மையான ஏழை மக்கள் பயனடைய முடியாத நிலை ஏற்படுகிறது.பல்லடம், அவிநாசி போன்ற அருகில் உள்ள பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் மக்கள்பயனடைந்திருக்கலாம் என்று பொதுமக்கள் கூறினர். இது குறித்துஇணைப் பதிவாளரிடம் கேட்டபோது, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். அதே சமயம் திருப்பூர் வளர்மதி கூட்டுறவு விற்பனை பண்டகசாலையில் குறிப்பிட்ட ஐந்து பொருட்களை தொகுப்பாக மலிவுவிலையில் விற்பனை செய்யப்படுகிறது என்றும் இணைப் பதிவாளர் தெரிவித்தார்.

விலைவாசி உயர்வினால் ஏமாற்றமடைந்த மக்கள் இத்திட்டம் கிடைக்காத நிலையில், அரசு அனைத்து பகுதிகளுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தி இருக்க வேண்டும். நகரங்களில்தான் பெரும்பான்மையான ஏழை மக்கள் உள்ளனர். குறிப்பிட்ட இடங்களில் மட்இத்திட்டத்தை அமல்படுத்தி விட்டு, மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் கொடுத்ததாக அரசு தெரிவிப்பது பெரும்பாலான மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றும் மக்கள் குற்றம்சாட்டினர். தீபாவளி பண்டிகைக்கு ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் அரசு உடனடியாக மலிவு விலை மளிகைப் பொருட்கள் திட்டத்தை மாநகரங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி ஏழை மக்கள் பயனடையநடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.