விவசாயிகள் எதிர்ப்பால் ஐடிபிஎல் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு 100% இழப்பீடு: அரசாணை வெளியீடு!
16 Jul 2026, 10:15 pm

விவசாயிகள் எதிர்ப்பால் ஐடிபிஎல் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு 100% இழப்பீடு: அரசாணை வெளியீடு!

திருப்பூர், ஜூலை 16 – கோவை இருகூர் முதல் பெங்களூரு தேவணகொந்தி வரை குழாய் மூலம் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு செல்லும் ‘ஐடிபிஎல்’ திட்டத் திற்காக, விவசாயிகளுக்கு வழங்கப் படும் நில இழப்பீட்டுத் தொகையை நிலத்தின் சந்தை மதிப்பில் 100 சதவீத மாக உயர்த்தி தமிழக அரசு புதிய அர சாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே புத னன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவின்படி, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தின் மூலம் கோவை மாவட்டம் சூலூர் வட்டம், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், திருப் பூர் தெற்கு மற்றும் காங்கேயம் ஆகிய வட்டப் பகுதிகளில் இந்த எரிசக்தி வழித் தட திட்டப் பணிகள் கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, கடந்த 2020 பிப்ரவரி 14 அன்று தொழில்துறை வெளியிட்ட அர சாணை எண் 54-இன் கீழ், விவசாய நிலப்பரப்பில் குழாய் பதிக்கும் நிலப் பயன்பாட்டு உரிமைக்காக நிலத்தின் சந்தை மதிப்பில் வெறும் 20 சதவீதமே இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த சொற்ப தொகையை ஏற்க மறுத்து, தங்களின் வாழ்வாதார விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி விவசாயிகள் தரப்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும், விளைநிலங்களை தவிர்த்து சாலை வழியாக மாற்றுப் பாதையில் இக்குழாய்களை பதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

விவசாயிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து, கடந்த 2025 ஆகஸ்ட் 19 அன்று அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் மாற்று வழிகள் குறித்து கூட்டுப் புல னாய்வு மேற்கொண்டனர். எனினும், தொழில்நுட்பக் காரணங்களால் சாலை அல்லது மாற்றுப் பாதைகளில் குழாய் பதிப்பது சாத்தியமில்லை என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

100% உயர்வு அரசாணை இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நிலம் வழங்கும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு, தமிழக அரசின் தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை கடந்த 2026 ஜூலை 6 அன்று புதிய அரசாணை (எண்: 183) பிறப்பித்துள் ளது. இதன்படி நில இழப்பீடு 20 சதவீதத் திலிருந்து 100 சதவீதமாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அதிரடி உயர்வால், திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் ரூ.8 கோடியாக இருந்த மொத்த இழப்பீட்டுத் தொகை தற்போது ரூ.50 கோடியாகவும், கோவை மாவட்டத்தில் ரூ.3 கோடியாக இருந்தது ரூ.17 கோடியாகவும் கணிச மாக அதிகரித்துள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட நில உரிமை யாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்க ளின் உரிமை ஆவணங்களுடன், “அதி காரம் பெற்ற அலுவலர் / துணை ஆட்சி யர், இருகூர் - தேவணகொந்தி குழாய் பதிப்பு திட்டம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், மகாலட்சுமி அவென்யூ, பல்லடம் - 641 664” என்ற முகவரியில் உள்ள திட்ட அலுவலகத் திற்கு நேரில் சென்று தங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.