அரசு ஊழியர் சங்கத்தின் 43வது அமைப்பு தினம் திருவில்லிபுத்தூரில் கொடியேற்று விழா
6 May 2026, 9:23 pm

அரசு ஊழியர் சங்கத்தின் 43வது அமைப்பு தினம் திருவில்லிபுத்தூரில் கொடியேற்று விழா

திருவில்லிபுத்தூர், மே 6- தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் 43வது அமைப்பு தினத்தை முன்னிட்டு, திருவில்லிபுத்தூரில் கொடியேற்று விழா நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கம், அரசு ஊழியர்களின் நலன் மற்றும் உரிமைகளுக்காக 1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், 42 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு 43வது அமைப்பு தினம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, திரு வில்லிபுத்தூர் வட்டக் கிளை சார்பில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாகவும், நகராட்சி அலுவல கம் முன்பாகவும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு வட்டக் கிளை தலைவர் பி.பொன்ராஜ் தலைமை தாங்கினார்.

வட்டக் கிளை செயலா ளர் பி.திருப்பதிராஜ் முன்னிலை வகித்தார்.

நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு, சங்கக் கொடி யை பி.பொன்ராஜ் ஏற்றி வைத் தார்.

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனக் கொடியை, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலை வர் பி.பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.

நகராட்சி அலுவலகம் முன்பு, சாலை பணியாளர் சங்க கோட்டச் செயலாளர் தேவராஜ் கொடியேற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் நெடுஞ் சாலைத்துறை மற்றும் நக ராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சாலை பணியாளர் சங்க நிர்வாகிகள் கோபால், ஆறு முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அமைப்பு தினத்தை முன் னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.