மாநகராட்சி தூய்மைப் பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் டெண்டர் ரத்து முடிவை வரவேற்று சிஐடியு அறிக்கை!
26 Jun 2026, 10:17 pm

மாநகராட்சி தூய்மைப் பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் டெண்டர் ரத்து முடிவை வரவேற்று சிஐடியு அறிக்கை!

சென்னை, ஜூன் 26- தமிழகத்தில் மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 12 மாநக ராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்காக வெளி யிடப்பட்டிருந்த டெண்டர் அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. இந்த முடிவை சிஐடியு மற்றும் தமிழ் நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனம் வரவேற்றுள்ள தோடு, தூய்மைப் பணிகளைத் தனியா ரிடம் ஒப்படைக்கும் முயற்சியை முற்றி லும் கைவிட்டுத் தமிழக அரசே தனது நேரடிக் கட்டுப்பாட்டில் அதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

பொதுமக்கள் கருத்துக் கேட்பு பொருத்தமற்றது

தூய்மைப் பணி தனியார்மய டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில், இது தொடர்பாகப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்க அரசு திட்டமிட்டுள்ள தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குச் சிஐடியு தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் அடித்தட்டு மக்கள் பணி யாற்றும், நிரந்தரத் தன்மை கொண்ட தூய்மைப் பணியைத் தனியாரிடம் ஒப்ப டைப்பது குறித்துப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பது எந்த வகையிலும் பொருத்தமாகாது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், இத்தகைய பொதுக் கருத்துக் கேட்பு நடவடிக்கை என்பது பொதுமக்களின் சுகாதாரப் பராமரிப்பிற்கும் உகந்தது அல்ல என்ப தால், தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும், பணிப் பாது காப்பையும் உறுதிப்படுத்தும் வகை யில் இப்பணிகளை அரசே முழுமை யாகத் தனது பொறுப்பில் எடுத்து நடத்த வேண்டும் என்று அவர் தமது அறிக் கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனியார்மய அரசாணைகளை ரத்து செய்ய ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

இதற்கிடையே, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலத் தலைவர் கே.ஆர்.கணேசன், பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களில் தூய்மைப் பணி, குடிநீர் விநியோ கம், ஓட்டுநர்கள், எலக்ட்ரீசியன், பிளம்பர், வரி வசூலிப்பவர்கள் மற்றும் டெங்கு நோய் தடுப்பு ஊழியர்கள் உள்ளிட்ட இதர பணிகளையும் தனியார்மயமாக் கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அர சாணைகள் 152, 139 ஆகியவற்றைத் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தல் கால வாக்குறுதியின்படி, 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் அனைவரை யும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துப் பிரிவு அவுட் சோர்சிங் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண் டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

முன்களப் பணியாளர்கள், கிராம ஊராட்சிப் பிரச்சனைகள்

அவர்கள் முன்வைத்துள்ள 10 அம்சக் கோரிக்கைகளில், கொரோனா காலத்தில் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றிய முன்களப் பணி யாளர்களுக்கு முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 15,000 ரூபாய் ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பதும் பிரதானமாக இடம்பெற்றுள்ளது.

அதேபோல், தமிழகத்தில் உள்ள 12,524 கிராமப்புற ஊராட்சிகளில் நில வும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணி யிடங்களை நிரப்ப விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை ரத்து செய்து, வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று சம்மேளனம் கோரியுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் சுமார் 40 ஆண்டுகள் வரை பணிசெய்து எவ்விதப் பணப்பயனுமின்றி ஓய்வுபெறும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (OHT) ஆப்பரேட்டர்களுக்கு மாத ஓய்வூதி யமும், ஒட்டுமொத்த தொகையும் வழங்க அரசு தனி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும், தூய்மைக் காவ லர்களுக்கு ஊராட்சி நிதியிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அம்மா உணவக ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்ப ஊதியம் வழங்கி, பெண்களுக்கான பணிப் பாது காப்பை உறுதி செய்யக் கோரியுள்ள சம்மேளனம், மக்கள் வரிப்பணத்தைப் பாதுகாக்கவும், பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவைகளைத் தொய் வின்றிச் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்துப் பணி களும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டி லேயே செயல்பட வேண்டும் எனத் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.