தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண்கள் - குழந்தைகள் மீது அதிகரிக்கும் வன்முறைகள் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

2 Jun 2026, 9:20 pm
பெண்கள் - குழந்தைகள் மீது அதிகரிக்கும் வன்முறைகள் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

பெண்கள் - குழந்தைகள் மீது அதிகரிக்கும் வன்முறைகள் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 2 - அதிகரித்து வரும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள், தாக்குதல்களை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொது இடங்களில் பாது காப்பு வசதிகளை பலப்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா, பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறி க்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள வேளச்சேரி மூதாட்டி பாலியல் வன்கொடுமை, மெரினா கடற்கரையில் ஆறு வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல், கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தமிழகம் முழு வதும் அதிர்ச்சியையும் கொந்த ளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

வேளச்சேரியில் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த 61 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது, பாதுகாப்பு தேவைப்படும் நிலையில் இருந்த ஒரு பெண்ணைக்கூட பாலியல் வன்முறையின் இலக்காக மாற்றி யிருப்பது சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் கொடூர மான மனநிலையை வெளிப்படுத்து கிறது

. மெரினா கடற்கரையில் குடும்பத்தினருடன் வந்திருந்த ஆறு வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் நடத்தப்பட்டிருப்பது, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில்கூட குழந்தைகள் பாது காப்பாக இல்லை என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இடங்களிலேயே இத்த கைய சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த கவலைக்குரியது.

கோயம்பேட்டில் இளம்பெண் ஒருவர் கார் ஏற்றி கொலை செய்யப் பட்ட சம்பவம், சமூகத்தில் வன்முறை மனநிலை அதிகரித்து வருவதையும் அபாயகரமான போக்கையும் சுட்டிக் காட்டுகிறது.

மதுரை மாவட்டம் திருமங்க லத்தில் 13 வயது சிறுமி கும்பல் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்ட வழக்கில் நான்கு சிறார்கள் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் மூன்று வயது குழந்தைக்கு பாலி யல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் மனிதநேயத்தை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. பெண்கள், சிறுமிகள், முதிய பெண்கள் என வயது வேறுபாடி ன்றி தொடர்ந்து பாலியல் வன்மு றைகள் மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகிக் கொண்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

ஒவ் வொரு சம்பவத்திற்குப் பிறகும் கைது நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டாலும், பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் குறைவதில்லை.

இது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு மற்றும் காவல்துறை இன்னும் தீவிரமான, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது. மோசமான செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

பாலியல் அத்துமீறல் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் விரைவான விசாரணை நடத்தி தண்டனையை உறுதி செய்ய வேண்டும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான நட வடிக்கைகளை தமிழக அரசு உட னடியாக எடுக்க வேண்டும்.

கடற்கரைகள், பேருந்து நிலை யங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்த வேண்டும்.

அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்திட உறுதியான நடவடிக்கைகள் தேவை என தமி ழக அரசை அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித் துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.