தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகளுக்கு ஏமாற்றம்

25 May 2026, 8:53 pm
விவசாயிகளுக்கு ஏமாற்றம்

விவசாயிகளுக்கு ஏமாற்றம்

சாமி. நடராஜன் அறிக்கை!

சென்னை, மே 25 - கூட்டுறவு வங்கிப் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அரசின் அறி விப்பு விவசாயிகளுக்கு ஏமாற்ற மளிப்பதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான மாநில அரசு கூட்டு றவு வங்கிகளில் சிறு-குறு விவசாயி களுக்கு கடன் தள்ளுபடி அறி வித்துள்ளது தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு முரணாக உள்ளது.

தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயி களுக்கு அவர்கள் பெற்றுள்ள கூட்டு றவு பயிர்க்கடனில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது ரூ. 50 ஆயிரம் வரை கடன் வாங்கியுள்ள குறு விவசாயி களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி என்றும், அதற்கு மேல் கூடுதலாக கடன் பெற்ற ஒவ்வொரு பத்தா யிரத்துக்கும் குறிப்பிட்ட தொகை தள்ளுபடி என்று அறிவித்துள்ளனர்.

மேலும் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் கடன் பெற்றுள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு வெறும் ரூ .5000 மட்டும் தள்ளுபடி என்று மாநில அரசு அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல.

வேளாண் உற்பத்திச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ள சூழ்நிலை கள், ஒன்றிய அரசு கட்டுப்படியான ஆதார விலையை அறிவிக்காத நிலை யில் பெரும் பகுதி விவசாயிகள் கட னாளிகளாக மாறி உள்ளனர்.

தமிழ்நாட்டிலும் விவசாயிகள் கடுமையான கடன் நெருக்கடியில் உள்ள நிலையில் மாநில அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் 5 ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர்க் கடன் முழுவதை யும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயி கள் பெற்ற கூட்டுறவு பயிர்க் கடனில் 50 சதவிகிதத்தை தள்ளுபடி செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மாநில அரசை வலி யுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.