புதிய நடுவர் மன்றக் கோரிக்கையைத் திரும்பப் பெறுக!
20 Jun 2026, 11:51 pm

புதிய நடுவர் மன்றக் கோரிக்கையைத் திரும்பப் பெறுக!

தஞ்சாவூர், ஜூன் 20- மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்று சேர்க்கப்பட்டுள்ள திருத்தத்தைத் தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், கர்நா டக அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் புதிய அணை கட்டுவதைத் தடுக்க வலியுறுத்தித் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாகக் குறிப்பிட்டார். அ

தேசமயம், இத்தீர் மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டா லின் முன்மொழிந்த ‘புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்ற திருத்தம், முழுமையாக விவாதிக்கப்படாமலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது என்றார்.

நதிநீர் தீர்ப்புகள் உள்ளபோது புதிய நடுவர் மன்றம் ஏன்? கடந்த 1990-இல் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 2007-இல் இறுதித் தீர்ப்பை வழங்கியதையும், அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசா ரித்த உச்ச நீதிமன்றம் 2018-இல் இறுதித் தீர்ப்பை அளித்ததையும் சாமி.நடராஜன் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, கர்நாடகா ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி நீரை மாதவாரியாக வழங்க வேண்டும் என்ற உத்தேசத் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு அம லில் இருக்கும் என்றார். இத்தகைய சூழலில், நதிநீர் பகிர்வுக்கான இறுதித் தீர்ப்புகள் ஏற்கெனவே அமலில் இருக்கும் போது, அணை கட்டுவதைத் தடுக்கப் புதிய நடு வர் மன்றம் கோருவது காவிரிப் பிரச்சனையை மீண்டும் தொடக்கப் புள்ளிக்கே பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரு தவறான முன்னெடுப்பா கும் என அவர் எச்சரித்தார்.

தமிழக அரசின் நிலைப்பாடும் கர்நாடகாவின் உள்நோக்கமும் கடந்த காலங்களில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலோ அல்லது முந்தைய தீர்மானங் களிலோ இத்தகைய கோரிக்கை முன்வைக்கப்பட வில்லை எனக் குறிப்பிட்ட அவர், தவெக அரசு திடீ ரென இத்திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பது சரி யல்ல என்றார். எனவே, அந்தச் சரத்துக்களைத் தீர்மானத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என வற்புறுத்தினார். பெங்களூரு குடிநீர் தேவைக்காகவே அணை கட்டுவதாகக் கர்நாடகம் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்று சாடிய அவர், மழைக்காலங் களில் உபரியாக வரும் தண்ணீரைத் தேக்கித் தமிழ கத்திற்கு நீர் வருவதைத் தடுப்பதே கர்நாடகாவின் உண்மையான நோக்கம் என்றார்.

மேக தாது அணை கட்டப்பட்டால், 69 டி.எம்.சி தண்ணீ ரைத் தேக்க முடியும் என்பதால் இது டெல்டா விவ சாயிகளுக்குப் பேரிழப்பை உண்டாக்கும் என வேதனை தெரிவித்தார். ஏற்கனவே சட்டப்பூர்வ மான இறுதித் தீர்ப்புகள் உள்ள நிலையில், பேச்சு வார்த்தைக்கோ அல்லது சமரசத்திற்கோ இட மில்லை என்றும், கர்நாடகாவின் அணை முயற்சி யைத் தடுக்கத் தமிழக அரசு சட்டப்பூர்வமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நிலைப்பாடு முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பின்படி 142 அடி நீரைத் தேக்க வேண்டும் என்பதில் விவசாயிகள் சங்கம் உறுதி யாக உள்ளது என்றார். இதற்காகக் கேரளாவில் இடது சாரி ஆட்சி இருந்த காலத்திலும்கூட, தங்களின் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தியிருப்பதை நினைவு கூர்ந்த அவர், நீதிமன்றத் தீர்ப்புகளை முழுமையாக அமல்படுத்துவதே தங்களின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.