விவசாய அடையாள எண்ணை கட்டாயமாக்கும் முடிவை மாநில அரசு கைவிட வேண்டும்! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு
2 Nov 2026, 10:43 pm

விவசாய அடையாள எண்ணை கட்டாயமாக்கும் முடிவை மாநில அரசு கைவிட வேண்டும்! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு

சென்னை, நவ.2 -ஒன்றிய அரசின் வலியுறுத்தலின் பேரில் பயிர் காப்பீடு உள்ளிட்ட அனைத்திற்கும் விவசாய அடையாள எண்ணை கட்டாயமாக்கும் முடிவை மாநில அரசு கைவிடக் கோரி திங்களன்று (02.11.2026) தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன், மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், என்.சுப்பிரமணி ஆகியோர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முதன்மை செயலாளர் வெங்கடேஷை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

அப்போது வேளாண்மை துறை செயலாளர், “ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். இதை அமல்படுத்துவதில் சிரமம் உள்ளது. இத்திட்டத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டுமென கேட்டுள்ளோம்” என்றார்.

ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டுமென கட்டாயப்படுத்தினால், தமிழ்நாட்டில் அமல்படுத்த இயலாது என மாநில அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு கடன் தள்ளுபடி சம்பந்தமான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டுமெனவும், வட்டியையும் சேர்த்து தள்ளுபடி செய்திட வேண்டுமென நிதித்துறை செயலாளர் சித்திக், கூட்டுறவு செயலாளர் அமுதா ஆகியோரை சந்தித்து வலியுறுத்தப்பட்டது. நிதித்துறை செயலாளர் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்தார்.