தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முதல்வரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு

2 Jun 2026, 9:31 pm
விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முதல்வரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முதல்வரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு

சென்னை, ஜூன் 2- தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப் பேற்றுள்ள சி.ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு, விவசாயிகளின் மிக முக்கியமான கோரிக்கைகளை உள்ளடக்கிய விரி வான மனு ஒன்றையும் அளித்து அவற்றை உட னடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வா யன்று (ஜூன் 2) நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தலைமையில் மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், மாநிலத் துணைத் தலைவர் பி.டில்லிபாபு (முன்னாள் எம்.எல்.ஏ), மாநிலச் செயலாளர் பி.பெருமாள், மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.அனு ஆகியோர் அடங்கிய பிரதி நிதிகள் குழுவினர் முதலமைச்சரிடம் இந்த கோ ரிக்கை மனுவை நேரில் அளித்தனர்.

அந்த மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகளின் விவரம் வருமாறு: பயிர்க்கடன் தள்ளுபடியை மறுபரிசீலனை செய்க! புதிய அரசு பொறுப்பேற்றவுடன் கூட்டுறவு வங்கி களில் விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் 2,044.46 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்துள்ள தைச் சங்கம் வரவேற்றுள்ளது.

அதேநேரம், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி 5 ஏக்கர் வரையுள்ள விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் பயிர்க்கட னில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்தால்தான் பெரும்பகுதி விவசாயிகள் பலன் பெறுவார்கள் என்பதால், இத்திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேகதாது விவகாரத்தில் ஒன்றுபட்ட எதிர்ப்பு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணையைக் கட்டியே தீருவோம் என்று உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பிற்கு எதிராகச் சவால் விட்டு வரும் கர்நாடக அரசின் போக்கைச் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தமிழ்நாட்டின் பாசன உரிமையைப் பறிக்கும் செயல் என்பதால், தமிழக அரசு உரிய சட்ட நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவரித் துள்ளது.

மேலும், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயச் சங்கங்களை உள்ளடக்கிய கூட்டத் தைக் கூட்டி ஆலோசனைகளைப் பெற்று, தமிழ கத்தின் ஒன்றுபட்ட எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண் டும் என்று வலியுறுத்தியுள்ளது.

விளைபொருட்களுக்கு நியாயமான விலை மற்றும் ஊக்கத்தொகை ஒன்றிய பாஜக அரசு சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதார விலையை வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள சங்கம், மாநில அரசு தனது பங்காகப் பின்வரும் விலை உயர்வுகளை அறி விக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளது: நெல் & கரும்பு: நெல் குவிண்டாலுக்கு 3,500 ரூபாயும், கரும்பு டன்னுக்கு 5,000 ரூபாயும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

பால் கொள்முதல்: பாலுக்கான கொள் முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி, பசும்பாலுக்கு 45 ரூபாயும், எருமைப் பாலுக்கு 60 ரூபாயும் வழங்க வேண்டும். பச்சைத் தேயிலை & காபி: பச்சைத் தேயி லைக்குக் கிலோவுக்குக் குறைந்தபட்சம் 35 ரூபாய் வழங்க வேண்டும்.

நீலகிரி, ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் விளையும் காபியைக் கொள் முதல் செய்ய ‘கார்பன் நியூட்ரல் காபி’ அமைப்பைத் தொடங்கி மதிப்புக்கூட்டி விற்க வேண்டும். சிறு, குறு காபி விவசாயிகளுக்குக் கிலோவுக்கு 10 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும்.

ரப்பர் & மரவள்ளிக்கிழங்கு: கன்னியா குமரி மாவட்ட ரப்பருக்குக் கேரளத்தைப் போல குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வதோடு, ரப்பர் ஆராய்ச்சி மையத்தை உடனே துவங்க வேண்டும். 21 மாவட்டங்களில் விளையும் மரவள்ளிக்கிழங்கை ‘சேகோ செர்வ்’ மூலம் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

தேங்காய் & கறிக்கோழி: தேங்காய் விலை வீழ்ச்சியைத் தடுக்க உரித்த முழுத் தேங்கா யைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும்.

40,000 கறிக்கோழி பண்ணை யாளர்களின் வளர்ப்புக்கூலியை கிலோவுக்கு 20 ரூபாயாக உயர்த்த முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

நில உரிமை மற்றும் பரந்தூர் திட்ட ரத்து நிலமற்ற பல்லாயிரக்கணக்கான விவசாயி களுக்கு நில உச்சவரம்பு உபரி நிலங்களையும், அரசு தரிசு நிலங்களையும் கண்டறிந்து வழங்க வேண்டும் என்று சங்கம் கோரியுள்ளது.

பல தலை முறைகளாகக் கோவில், மடம், அறக்கட்டளை நிலங்களில் சாகுபடி செய்வோருக்கும், குடியிருப்ப வர்களுக்கும் ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் விவ சாயிகளின் அனுமதியின்றி நஞ்சை நிலங்களைக் கட்டாயமாகப் பறிக்கக் கூடாது என்று குறிப்பிட்ட சங்கம், விவசாயிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வரும் பரந்தூர் புதிய பசுமை விமான நிலையத் திட்டத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ப

ழங்குடியின மக்கள் மற்றும் நீர்ப்பாசன மேம்பாடு வன உரிமைச் சட்டம் 2006-ஐ முழுமையாகச் செயல்படுத்தி, வனநிலங்களில் சாகுபடி செய்யும் பழங்குடிகளை அப்புறப்படுத்தாமல் பட்டா வழங்க வேண்டும் என்றும், இனச்சான்றிதழ் வழங்கும் அர சாணை 104-ஐ அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புலையன், வேட்டைக் காரன், குருமன்ஸ் உள்ளிட்ட உட்பிரிவினரைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள மேட்டூர், வைகை உள்ளிட்ட 84 பெரிய மற்றும் சிறிய அணைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் தூர்வார வேண்டும் என்றும், சுமார் 42,000 ஏரி, குளங்களைத் தூர்வாரினால் 13,962 கோடி கனஅடி நீரைச் சேமிக்கலாம் என்ப தால் அதற்குச் சிறப்புத் திட்டம் தீட்ட வேண்டும் என்றும் சங்கம் எடுத்துரைத்துள்ளது.

கிடப்பில் உள்ள காவிரி - வைகை - குண்டாறு - வைப்பாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வும், முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் விவகாரங்களில் தமிழகத்தின் உரிமையைப் பாது காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பயிர்க் காப்பீடு மற்றும் நெல் கொள்முதல் முறைகேடு தடுப்பு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாபமடை வதற்கே தற்போதைய ஒன்றிய அரசின் காப்பீட்டுத் திட்டம் உதவுவதால், விவசாயிகளுக்கு முழுமை யான இழப்பீடு கிடைக்க மாநில அரசே தனி யாகப் பயிர்க் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்றும், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கும் இதில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சங்கம் கோரியுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்து, விவசாயி களின் நெல்லைப் பாதுகாக்க முறையான களம் அமைத்துத் தர வேண்டும் என்றும், கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் சேமிப்புக் கிடங்கு களுக்கு அனுப்பி, அதற்கான தொகையைத் தாமதமின்றி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், இயற்கை விவசாயத்தை மேற்கொள் ளும் விவசாயிகளுக்குத் தொடர்ந்து 3 ஆண்டு களுக்கு மானியம் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.