தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம், உரிமைகளைப் பாதுகாக்க 14 அம்சக் கோரிக்கைகள் முதலமைச்சரிடம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் விரிவான மனு

5 Jun 2026, 1:18 am
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம், உரிமைகளைப் பாதுகாக்க 14 அம்சக் கோரிக்கைகள் முதலமைச்சரிடம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் விரிவான மனு

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம், உரிமைகளைப் பாதுகாக்க 14 அம்சக் கோரிக்கைகள்

முதலமைச்சரிடம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் விரிவான மனு

தமிழ்நாட்டில் வாழும் சுமார் 14 லட்சம் மாற்றுத்திற னாளி குடும்பங்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் 14 முக்கிய கோரிக்கைகளை உள்ளடக்கிய விரிவான மனு ஒன்றைத் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யிடம் நேரில் அளித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் செவ்வாயன்று (ஜூன் 2) நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, சங்கத்தின் மாநி லத் தலைவர் தோ.வில்சன், பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி, பொருளாளர் கே.ஆர்.சக்ரவர்த்தி ஆகி யோர் கோரிக்கை மனுவை அளித்து விவாதித்தனர். அந்த மனுவில் விவரிக்கப்பட்டுள்ள 14 அம்சக் கோரிக்கைக ளின் விவரம் வருமாறு:

1. ஒரே நாளில் அடையாளச் சான்று & வெளிப்படையான விழுக்காடு

புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் மருத்துவ முகாம்களில் அனைத்து வகை சிறப்பு மருத்து வர்களும் ஒரே இடத்தில் பங்கேற்பதை உறுதி செய்து, மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்காமல் ஒரே நாளில் அடையாளச் சான்றுகளை வழங்க வேண்டும். அகில இந்திய மருத்துவக் குழும விதிப்படி ஊனத் தின் தன்மையைத் துல்லியமாகக் கணக்கிட அரசு மருத்துவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு ஊனத்திற்கான விழுக்காடு வரையறையை அரசு மருத்துவமனைகளில் வெளிப்படையாகப் பட்டியலிடுவ தோடு, நிரந்தர ஊனமுற்றோருக்கு வாழ்நாள் சான்றித ழைப் பதிவு செய்ய வேண்டும்.

2. தடையற்ற கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் நியமனம்

அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் (Ramp), மின்தூக்கி (Lift), வெஸ்டர்ன் கழிப்பறை வசதிகளுடன் தடையற்ற சூழலை உருவாக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை முழு இலவசக் கல்வி வழங்குவதோடு, எளிதான போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்த வேண்டும். ஆட்டிசம், அறிவுசார் மற்றும் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்காக அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் சிறப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். சிறப்புப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, சிறப்பாசிரியர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும். டிஎன்பிஎஸ்சி (TNPSC) போன்ற போட்டித் தேர்வுக ளை எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே தரைத்தளத்தில் தேர்வு அறைகளை ஒதுக்க வேண்டும். தேர்வு எழுதப் பதிலி எழுத்தர்களை (Scribe) முன்கூட்டியே தேர்வு செய்துகொள் ளும் வாய்ப்பை வழங்க வேண்டும்.

3. அரசுத் துறையில் 4%, தனியாரில் 5% வேலைவாய்ப்பு உறுதி

கடந்த 2021-ஆம் ஆண்டு 20 நபர்களுக்கு மேல் உள்ள தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிக ளுக்கு 5% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வெளி யிடப்பட்ட அரசாணை இதுவரை நடைமுறைக்கு வர வில்லை என்பதைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, அரசுத் துறைகளில் 4 விழுக்காடும், தனியார் துறைக ளில் 5 விழுக்காடும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். சுயதொழில் புரிய விரும்பும் மாற்றுத்திறனாளி களுக்கு எவ்வித பிணையமும் (Collateral) இன்றி மானி யத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் ஆவின் பாலகம் அமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். அர சுக்குச் சொந்தமான வணிக வளாகங்கள், பேருந்து நிலையக் கடைகளில் 5% கடைகளை ஒதுக்க வேண்டும். பல்வேறு அரசுத் துறைகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தொ குப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளைப் பணி நிரந்தரம் செய்வதோடு, முறையான போக்கு வரத்துப் படியை வழங்க வேண்டும். உலக ஊன முற்றோர் தினமான டிசம்பர் 3 அன்று ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும்.

4. நூறுநாள் வேலைத் திட்டத்தில் கட்டாயப் பதிவிலிருந்து விலக்கு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தில் கருவிழி மற்றும் கைரேகைப் பதிவைச் செய்ய முடி யாத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை மறுக்கப்படுவ தைத் தடுத்து, அவர்களுக்கு இந்த நடைமுறையிலி ருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு இத்திட்டத்திற்கான நிதியைக் குறைத்து வஞ்சித் துள்ளதால், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக் கெனச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்க வேண்டும். நகர்ப்புறங்களுக் கும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதோடு, மாற்றுத்திற னாளிகளை 8 மணி நேர வேலை செய்ய வற்புறுத்துவ தைக் கைவிட்டு 4 மணி நேர வேலை முறையைத் தொடர வேண்டும்.

5. கட்டணமில்லா உபகரணங்கள் & பாதுகாப்பாளர் உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் கட்டணமின்றி வழங்க வேண்டும். முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் மருந்து தொகுப்பு மற்றும் உப கரணங்கள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகக் கிடைப் பதை உறுதி செய்வதோடு, அவர்களின் பாதுகாப்பா ளர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகையையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

6. அணுகத்தக்க தமிழகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள், வங்கிகள் மற்றும் கோவில்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது இடங்களையும் மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அணுகுமுறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அனைத்துப் பொது இடங்களி லும் மாற்றுத்திறனாளிகளுக்கெனத் தனி உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

7. பெண் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு & மகளிர் உரிமைத்தொகை

ஆதரவற்ற, மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மாற்றுத் திறனாளிகளுக்காகப் பாதுகாப்பு, கல்வி, வேலை வாய்ப்புப் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கும் காப்பகங்களை மாவட்டம் தோறும் அமைக்க வேண்டும். பெற்றோர் பணிக்குச் செல்லும்போது மாற்றுத்திறனாளி களைப் பராமரிக்கப் பகல்நேரத் தங்குமிடங்களை உரு வாக்க வேண்டும். பெண் மாற்றுத்திறனாளிகள் மீதான வன்கொடுமைப் புகார்களை அச்சமின்றிப் பதிவு செய்யக் காவல் நிலையங்களில் சைகை மொழிபெயர்ப் பாளர்களை நியமிக்க வேண்டும். குடும்பத் தலைவிக ளாக உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிப் பெண்க ளுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

8. அந்த்யோதயா (A.A.Y) குடும்ப அட்டைகள்

மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களை வறு மைக்கோட்டிற்குக்கீழ் வாழும் குடும்பங்களாகக் கணக்கிட்டு, அவர்களுக்கு அந்த்யோதயா அன்ன யோஜனா (A.A.Y) திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகள் வழங்கி, 35 கிலோ உணவு தானியங்களை இலவச மாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

9. வீட்டு மனைப் பட்டா மற்றும் சிறப்பு வீடுகள்

வீட்டு மனை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் அணுகல் தன்மை க்கு ஏற்ப தரைத்தள வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாநகரப் பகுதிகளில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனும், சுலப தவணை முறையிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வீடுகளையும் கட்டித் தர வேண்டும்.

10. ஆட்டோ ஓட்டுநர் உரிமம்

தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடு பட்டுத் தங்களின் வாழ்வாதாரத்தைக் கவனித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அதற்கான வணிகரீதியான ஓட்டுநர் உரிமங்களை (Commercial Driving License) தடையின்றி வழங்கிட வேண்டும்.

11. ஒரே துறை மூலம் மாதாந்திர உதவித்தொகை

தற்போது மாற்றுத்திறனாளிகள் துறை மற்றும் வருவாய்த்துறை என இரு துறைகள் மூலம் பிரித்து வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை நடைமுறை யை மாற்றி, மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் மட்டுமே ஒற்றைச் சாளர முறையில் வழங்க வேண்டும். 18 வய துக்குட்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கத் தடையாக உள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையிலான வயது தளர்வு கமிட்டியை ரத்து செய்துவிட்டு, வயது வரம்பின்றி அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

12. கட்டணமில்லா சிறப்புத் தரிசனம் & சுற்றுலா வசதி

சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்க ளுக்குச் செல்லும் மாற்றுத்திறனாளிகள் தங்களது துணையாளர் ஒருவருடன் எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாகச் செல்ல அனுமதிக்க வேண்டும். கோ வில்களில் சிறப்புத் தரிசன முறைக்கு வழிவகை செய்வ தோடு, சுற்றுலாத் தலங்களில் உள்ள படகுப் போக்கு வரத்து, இழுவை ரயில், ரோப் கார் ஆகியவற்றிலும் துணையாளருடன் இலவசமாகப் பயணிக்க உத்தரவிட வேண்டும்.

13. குறைதீர் கூட்டங்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டங்க ளை மாநில அளவில் 3 மாதங்களுக்கு ஒருமுறையும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2 மாதங்களுக்கு ஒருமுறையும், கோட்டாட்சியர் தலைமை யில் மாதம் ஒருமுறையும் கட்டாயம் நடத்துவதை உறுதி செய்து, உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும்.

14. துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துரையாடல் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் அன்றாடம் சந்திக்கும் போக்கு வரத்துப் பிரச்சனைகள் மற்றும் மருத்துவச் சான்று பெறுவதில் உள்ள சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏதுவாக, போக்குவரத்து மற்றும் மருத்துவத்துறை அதி காரிகளுடன் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலை வர்கள் பங்கேற்கும் சிறப்புப் பேச்சுவார்த்தைக் கூட்டங்க ளை உடனடியாக நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் விரிவாகக் கோரப் பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பாரதி அண்ணா, பகத்சிங், ரமேஷ்பாபு, தமிழ்ச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.