தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

​​​​​​​தீக்கதிர் முக்கிய செய்திகள்

26 Jun 2026, 10:19 pm
​​​​​​​தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் தமிழ்நாட்டின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமனம்

சென்னை: ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும் தொழிலதிபருமான கே. வெங்கட நாரா யணா, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசால் அதிகாரப் பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் சலு கைகளும் வழங்கப்படும் இந்தப் பதவியில், பெங்களூ ரைச் சேர்ந்த கன்னடரான வெங்கட நாராயணாவுக்கு யாரும் எதிர்பாராத விதமாக இப்பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவர் அமைச்சரவை உறுப்பினராக இருக்க மாட்டார். ஒன்றிய அரசுடனான தொடர்பு மற்றும் ஒருங்கி ணைப்பு, மாநிலத்தின் முக்கியக் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை தில்லியில் முன்னெடுத்துச் செல்வது, முதல மைச்சரின் தில்லி பயணங்களை முறைப்படுத்துவது உள் ளிட்ட முக்கிய நிர்வாகப் பணிகளை அவர் மேற்கொள்வார்.

அதிமுகவில் வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் பதவி

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு அக்கட்சி யில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார். அத்துடன் கழக அமைப்புச் செயலாளர்களாக தங்கமணி, கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ் உள்ளிட்டோரும் நிய மிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் பதவி

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு அக்கட்சி யில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார். அத்துடன் கழக அமைப்புச் செயலாளர்களாக தங்கமணி, கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ் உள்ளிட்டோரும் நிய மிக்கப்பட்டுள்ளனர்.

மதிமுகவிலிருந்து சீர்காழி எம்எல்ஏ விலகல்

சென்னை: சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்செல்வன் மதிமுகவிலிருந்து விலகியதாக அறிவித் துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தனிச் சின்னத் தில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்ற சூழல் நிலவியதால், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிட முடிவெடுத்து, அப்போதே மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி திமுக உறுப்பினராக இணைந்து வெற்றி பெற்றதாக அவர் விளக்கமளித்தார். தற்போது தாம் திமுக உறுப்பினராக நீடிப்பதால் இனிவரும் காலங்களில் சட்டமன்ற உறுப்பினராக திமுகவிலேயே பணி யாற்றுவதாகவும், சீர்காழி தொகுதி மக்களின் நலனுக்காக தீவிரமாக செயலாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.