மாநகராட்சி நகராட்சிகளில் நிதி நெருக்கடி ஊழியர்கள் நலனை பாதுகாக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள்
6 Jun 2026, 9:37 pm

மாநகராட்சி நகராட்சிகளில் நிதி நெருக்கடி ஊழியர்கள் நலனை பாதுகாக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள்

திண்டுக்கல், ஜூன் 6- மக்களுக்கான நேரடி சேவை அமைப்பான மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் ஊழியர் அலுவலர்கள் நலனை பாதுகாக்க புதிதாக பொறுப் பேற்றிருக்கும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலை வர் கா.முருகானந்தம் விடுத்துள்ள அறிக்கையில், “மாநகராட்சி, நகராட்சியின் நிதி நிலை கடுமையான நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது என்பது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.

இதனால் மாநகராட்சி, நகராட்சியில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்க இயலாத நிலை

உருவாகியுள்ளது. தெரு விளக்கு பராமரித்தல், குடிநீர் வழங்குதல் போன்ற சேவைகள் தடைபடும் அபாயம் உள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கிட முன்வர வேண்டும்

. மாநில நிதிக் குழு ஆணையத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதிப் பகிர்வை மேலும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண் டும்.

தற்சமயம் ஏற்பட்டுள்ள இந்த நிதி பற்றாக்குறை காரணமாக தெரு விளக்கு பராமரிப்பதற்கான மின் கட்டணத்தை மின்சார வாரியத்திற்கும், குடிநீர் வழங்கும், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணத்தையும் செலுத்த முடியாமல் பல கோடி ரூபாய் நிலுவையில் கடனாக உள்ளது. ஊழியர்களி டம் பிடித்தம் செய்யப்படும் சேம நல நிதி, சி.பி.எஸ் நிதி, கூட்டுறவுக் கடன்களை செலுத்த முடியாமலும் பல கோடி ரூபாய் கடன்கள் நிலுவையில் உள்ளன.

கடந்த ஆட்சியின் போது, மாநகராட்சி, நகராட்சி தூய்மைப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப் பட்டன. இதன் காரணமாக உயர்நிலையில் உள்ள பணிகளா

ல் கூடுதல் சுமையானது. மாநகராட்சி, நகராட்சி, தனியார்மயம் காரண மாக ஊழியர்கள் நலன்கள் கேள்விக்குள்ளானது. அவுட்சோர்சிங் மூலம் நகராட்சி, மாநகராட்சிக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டது. தூய்மைப் பணி தனியார் மயமானதால் பணியில் உள்ள தொழிலாளி அல்லது ஊழியர் இறந்து போனால் அவர்களது குடும்பத்தில் உள்ள வாரிசுகளுக்கு வழங்க வேண்டிய வாரிசு வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டது. இதனால் துப்புரவு பணி யையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டிருந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வேலை வாய்ப்பின்றி வாழ்க்கையே கேள்விக்குள்ளாகி உள்ளது.

புதிய பணி விதிகள் 2023-இன்படி தற்போது பணி யாற்றி வரும் ஊழியர்களின் பதவி உயர்வும் பறிக்கப் பட்டுள்ளது.

பணி விதிகள் திருத்தம் முழுமையாக நிறைவடையாமல் இருப்பதால் நூற்றுக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வு பெறுகிற அவலநிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் பிற துறை பணியாளர்கள் நகராட்சி நிர்வா கத் துறையில் பணி அமர்த்தப்படுவதால், நகராட்சி, மாநகராட்சியில் பணியாற்றுபவர்களின் பதவி உயர்வு பறிக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும்.

அவுட்சோர்சிங் எனப்படுகிற தனியார்மயம் கைவிடப் பட வேண்டும். மீண்டும் மாநகராட்சி, நகராட்சி நிர்வா கம் மக்களுக்கு சேவையாற்றும் துறையாக மாற்றப்பட வேண்டும். வேலை வாய்ப்புகள் வழங்கும் துறை யாக மாற்றப்பட வேண்டும்.

பணி நிரவல் செய்யப்படாமல் ஒழிக்கப்படக் கூடிய பணிகளை மீண்டும் நிரந்தர பணியிடங்களாக மாற்ற வேண்டும். கல்வித்தகுதி அடிப்படையில் பணியாற்று பவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

தமிழ் நாடு முழுவதும் தூய்மைப் பணியினை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்.

நகராட்சி மாநகராட்சி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படி ஊதியம் மற்றும் ஓய்வூதி யத்தை மாவட்ட கரூவூலம் மூலம் வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.