இரண்டு சார்பதிவாளர்களை நியமிக்க வேண்டும்
28 Jun 2026, 2:20 am
<p><strong>இரண்டு சார்பதிவாளர்களை நியமிக்க வேண்டும்</strong></p><p>தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கம் கோரிக்கை</p><p>சேலம், ஜூன் 27- நீதிமன்ற தொடர் நடவடிக்கைக ளுக்கு இரண்டு சார்பதிவாளர்களை நிய மிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்க மாநில செயற்குழு கூட் டத்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள் ளது. தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சனி யன்று, சங்க மாநிலத் தலைவர் பால கிருஷ்ணன் தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில், சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையின் விவகார எல்லைக்குட்பட்ட 13 மாவட்டங்களில் இருந்து தாக்கல் ஆகும். துறை சார்ந்த வழக்குகளின் தன்மை குறித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தற்போது 242 கூட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய மதுரை சரகத்தில் சட்டப்பணி மேற் கொள்ளும் கூட்டுறவு சார்பதிவாளர் ஒரு வரே இருப்பதால் 13 மாவட்ட துறை சார்ந்த வழக்குகளும் அவர் மட்டுமே நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே சென்னை நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆகிய இரண்டு இடங்களுக்கும் தனியாக இரண்டு கூட்டுறவு சார்பதிவாளர்களை நீதிமன்ற தொடர் நடவடிக்கை அலுவ லராக நியமிக்க வேண்டும். பணியாற்றும் மாற்றுத்திறனாளிக ளுக்கு பதவி உயர்வில் முன்னிலைப் படுத்தும் அரசாணையின் 6-யை நடை முறைப்படுத்த வேண்டும். கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்காக உருவாக் கப்பட்ட பணியிடங்களில் நிரந்தரமாக கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் முதுநிலை ஆய்வாளர்களை நியமனம் செய்திட வேண்டும். கூட்டுறவுத் துறை யில் அனைத்து மண்டலங்களிலும் கள அலுவலர்களாக பணியாற்றும் கூட்டு றவு சார்பதிவாளர்களுக்கு வட்டார தலைமை இடங்களில் அலுவலகம் மடிக்கணினி வசதி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடம் ஏற்படுத்த நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள் ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செய லாளர் நவநீதகிருஷ்ணன், மாநிலப் பொருளாளர் விஜயம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சேலம் மாவட்டச் செயலா ளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
