நிலுவை பயிர்க்கடன் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை எச்சரிக்கை!
3 Oct 2026, 1:22 pm
<p>கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள பயிர்க்கடன் வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.</p><p>இந்நிலையில், சில விவசாயிகளிடம் தொலைபேசி மூலம் நிலுவைப் பயிர்க்கடனை வசூலிக்க முயற்சிப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுபோன்று கூட்டுறவு சங்கத்தினர் தொடர்புகொண்டால், தொடர்புகொண்ட கைபேசி எண் மற்றும் கூட்டுறவு சங்க விவரங்களை 9884000845 என்ற கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ குறைதீர்வு எண்ணில் புகார் அளிக்கலாம் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது.</p><p><br></p>
