முந்தய பக்கம்

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.709.50 ஊக்கத்தொகை

4 Nov 2026, 10:56 pm
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.709.50 ஊக்கத்தொகை

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.709.50 ஊக்கத்தொகை

சென்னை, நவ. 4 –கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.709.50-ஐ வங்கிக் கணக்கில் செலுத்தும் பணியை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (நவ. 4) நடைபெற்ற நிகழ்ச்சியில், மூன்று கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து, 2025-26 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் 10.8.2026அன்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் ர. வினோத், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் துறைச் செயலாளர் நா. வெங்கடேஷ், சர்க்கரை ஆணையர் இரா. கண்ணன், கூடுதல் இயக்குநர் ச. அருண்ராஜ் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram