தீக்கதிர் முக்கிய செய்திகள்
6 Oct 2026, 10:21 pm

இன்று டிஎஸ்பி பயிற்சி நிறைவு அணிவகுப்பு முதல்வர் பங்கேற்கிறார்!

சென்னை: வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் புதன்கிழமை (அக். 7) மாலை 4 மணிக்கு நடைபெறும் 14 ஆவது பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் நிறைவு அணிவகுப்புவிழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்கிறார்.அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் முதல்வர், சிறப்பாகச் செயல்பட்ட பயிற்சியாளர்களுக்குக் கோப்பைகளையும் பதக்கங்களையும் வழங்குகிறார். காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் வரவேற்புரையும், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் விளக்கவுரையும் ஆற்றுகின்றனர்.காவல்துறை தலைமை இயக்குநர் (பயிற்சி) நன்றியுரை வழங்குவார். அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

‘அண்ணன் சீர்’ திட்டம்தங்க நாணயம், புடவை வழங்க அரசாணை

சென்னை: ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும் பட்டுப் புடவையும் வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வெளியிட்ட இந்த அரசாணையின்படி, ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 22 காரட் தங்கநாணயமும் பட்டுப் புடவையும் திறந்த ஒப்பந்தப் புள்ளி மூலம் கொள்முதல் செய்யப்படும்; அக்டோபர் 5 முதல் நடைபெறும் திருமணங்களுக்கு இது பொருந்தும்; விண்ணப்பங்கள் இணையம் வழியாகப் பெறப்படும். தகுதிகள், வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.தேர்தல் வாக்குறுதியில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குக் குறைவானவர்களுக்கு இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வருமான வரம்பு ரூ.2.5 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்து 5 மாதமாகியும்போலீசாருக்குப் பயணப்படி வழங்கவில்லை!

சென்னை: தேர்தல் காலத்தில் வெளி மாவட்டங்களுக்குப் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்படும் போலீசாருக்குப் பதவிக்கு ஏற்ப தினமும் ரூ.250 முதல் ரூ.400 வரை பயணப்படி வழங்கப்படும். தேர்தல் தேதி அறிவிப்பிலிருந்து முடிவு வெளியாகும் நாள் வரையிலான தொகை கணக்கிடப்பட்டு, மொத்தமாக அவர்களின் கணக்கில் செலுத்தப்படும். மார்ச் 15-இல் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து மே 7 இல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படும் வரை, 53 நாட்களுக்கு கிரேடு 2 போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை இரவு-பகலாகப் பணியாற்றினர். அவர்களுக்குத் தலா சுமார் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.21 ஆயிரம் வரை வழங்கப்பட வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 15 நாட்களுக்குள் இத்தொகை வரவு வைக்கப்பட்ட நிலையில், இம்முறை தாமதமாவதாகப் போலீசார் கூறுகின்றனர். தீபாவளிக்கு முன்பாகப் பயணப்படியை வழங்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

ஆட்சேபணை தெரிவிக்க

அக்.13 கடைசிசென்னை: செப்டம்பர் 27-இல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது. விடைகளில் ஆட்சேபணை இருந்தால் அக்டோபர் 13-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரிக்கை

சென்னை: பெரம்பூர் தொகுதியில் தாம் பெற்ற வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ரூ.600 கோடி சொத்து விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுஉள்ளன என்று அவர் கூறினார். மனுதாரர்களின் வாதத்துக்காக விசாரணையை நீதிபதி புதன்கிழமைக்கு (அக். 7) ஒத்திவைத்தார்.

விசாரணையின்றி பணி நீக்கம் கூடாது!

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், தற்காலிக பணிநீக்கம், பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளும், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், குற்ற குறிப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என, டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்தது.

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேந்தர், “நியாயமான, முறையான விசாரணைக்குப் பிறகுதான், தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். அவ்வாறு தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு தொழிலாளர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க போதுமான அவகாசத்தை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.