தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்த வேண்டும் முதலமைச்சர் விஜய்யிடம் மாற்றுத்திறனாளி சங்கம் நேரில் வலியுறுத்தல்

3 Jun 2026, 8:51 pm
பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்த வேண்டும் முதலமைச்சர் விஜய்யிடம் மாற்றுத்திறனாளி சங்கம் நேரில் வலியுறுத்தல்

பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்த வேண்டும் முதலமைச்சர் விஜய்யிடம் மாற்றுத்திறனாளி சங்கம் நேரில் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 3 - மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை யை உயர்த்தி வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யிடம் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சரை செவ்வாயன்று (ஜூன் 2) தலைமைச் செயலகத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச்செய லாளர் பா.ஜான்சிராணி, பொருளாளர் கே.ஆர்.சக்ரவர்த்தி ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அண்டை மாநிலங்களை விடக் குறைவான தொகை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட அந்த மனுவில், தமிழகத்தில் சுமார் 14 லட்சம் மாற்றுத்திறனாளி குடும்பங் கள் உள்ளதைச் சங்கம் சுட்டிக்காட்டி யுள்ளது.

சமூகத்தின் புறக்கணிப்பு, அவமதிப்புகளுக்கு மத்தியில் அவல நிலையில் வாழ்ந்து வரும் மாற்றுத்திற னாளிகள், தங்களின் வாழ்வாதாரத் திற்குப் பெரிதும் நம்பியிருப்பது தமிழக அரசால் வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையைத்தான் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கடும் ஊனமுற்றோருக்கு மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் மாதம் 2,000 ரூபாயும், இதர மாற்றுத்திறனாளிகளுக்கு வரு வாய்துறை மூலம் 1,500 ரூபாயும் மட்டுமே பராமரிப்பு உதவித்தொகை யாக வழங்கப்பட்டு வருவதாகச் சங்கம் தெரிவித்துள்ளது. இது அண்டை மாநி லங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறை வாகும் என்று மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மைக்கேற்ப 6,000, 10,000 மற்றும் 15,000 ரூபாயாகவும், புதுச் சேரியில் 3,000, 3,500 மற்றும் 4,500 ரூபாயாகவும் உதவித்தொகை வழங்கப்படுவதை அவர்கள் எடுத்துரை த்தனர்.

மேலும், தெலுங்கானாவில் அனைவருக்கும் 4,016 ரூபாய் வழங்கப்பட்டு வருவதையும் அவர்கள் ஒப்பீடாகக் குறிப்பிட்டனர்.

ஒன்றிய பாஜக அரசின் வஞ்சனை தமிழ்நாட்டிலும் இந்த உதவித் தொகையை உயர்த்த வலியுறுத்திக் கடந்த 3 ஆண்டுகளில் எண்ணற்ற போராட்டங்களை மாநில அளவில் நடத்தியும், காவல்துறையின் கடும் அடக்குமுறைக்கும் தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டும் இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தப்படவில்லை என்று சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஒன்றிய பாஜக அரசு கடந்த 16 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் உதவித்தொகை பெற்று வரும் சுமார் 8 லட்சம் மாற்றுத்திறனாளிகளில் வெறும் 65,000 பேருக்கு மட்டுமே தனது பங்களிப்பாக வெறும் 300 ரூபாயை வழங்கி வருவதாகக் குற்றம்சாட்டி னர். அதுமட்டுமின்றி, ஒன்றிய பட்ஜெட்டிலும் ஆண்டுக்காண்டு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து மாற்றுத்திற னாளிகளை ஒன்றிய அரசு வஞ்சித்து வருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஒன்றிய பாஜக அரசு மாற்றுத்திற னாளிகளைக் கைவிட்ட நிலையில், இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள தமிழ்நாடு அரசுதான், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்குப் பெரிதும் உதவிடக் கடமைப்பட்டுள்ளது என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை யை உடனே உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தச் சந்திப்பின்போது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பாரதி அண்ணா, பகத்சிங், ரமேஷ்பாபு, தமிழ்ச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

​​​​​​சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிப்பு வரும் பா.ஜான்சிராணி நம்பிக்கை

முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி, மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்துவது தொடர்பான கோரிக்கையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். மேலும், அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக முதலமைச்சர் தங்களுக்கு உறுதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.​​​​​​​

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.