தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத் தொகை உயர்வு!பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

10 Aug 2026, 9:45 pm
நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத் தொகை உயர்வு!பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத் தொகை உயர்வு!பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

சென்னை, ஆக. 10 -தமிழக விவசாயிகளின் நலன் கருதி, நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகை 159 ரூபாயும், கரும்புக்கு 360 ரூபாயும் உயர்த்தி வழங்கப் படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், திங்கட்கிழமை (ஆக. 10), விதி எண்: 110-இன் கீழ், நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை குறித்து முதலமைச்சர் விஜய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஊக்கத்தொகை விவரம்

அதில், “விவசாயிகளின் நலனைப்பாதுகாக்கும் நோக்கில், நெல், கரும்புக்கான ஊக்கத் தொகையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளோம். இதன்படி சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 289 ரூபாயும், பொதுரக நெல் குவிண்டாலுக்கு 159 ரூபாயும் உயர்த்திவழங்கப்படும்” என்று தெரிவித்தார்.“இதன் மூலம் விவசாயிகளுக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலையுடன் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 750-ம்,பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரம் 600 கிடைக்கும்.சர்க்கரை ஆலைகளில் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு ரூ. 3290.50 வழங்குகிறது. அத்துடன் கரும்புக்கான ஊக்கத்தொகை யாக தமிழக அரசு சார்பில் டன்னுக்கு 709 ரூபாய் 50 காசுகள் வழங்கப் படும். இதன் மூலம் கரும்பு விவசாயி களுக்கு டன் ஒன்றுக்கு 4,000ரூபாய்விலையாக கிடைக்கும்” என்று முதலமைச்சர் கூறினார்.

முதல் முறை

“நெல்லுக்கு 150 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. அதேபோல, கரும்பு டன்னுக்கு 134 ரூபாய்க்கு மேல் வழங்குவதும் இதுதான் முதல் முறையாகும்” என்று கூறிய முதலமைச்சர், “இந்த அரசு விவசாயிகளை விட்டு விடாமல் தோளோடு தோள் கொடுத்து, விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணை யாக இருக்கும்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.