விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி - தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு!
25 May 2026, 5:54 pm
<p>தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு முக்கிய கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, கூட்டுறவு வங்கிகள் மூலம் 50 ஆயிரம் ரூபாய் வரை பயிர் கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சிறு விவசாயிகளுக்கு அவர்கள் பெற்றுள்ள கடன் தொகையில் 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாய் வரை பயிர் கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். இதே பிரிவில் உள்ள சிறு விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.</p><p>அதேபோல், 60 ஆயிரம் ரூபாயிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை பயிர் கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். சிறு விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.</p>
