ரூ. 75 ஆயிரம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி
16 Jun 2026, 9:34 pm

ரூ. 75 ஆயிரம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி

சென்னை, ஜூன் 16 - கூட்டுறவு வங்கிகளில், குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகள் பெற் றுள்ள ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப் படும் என தமிழ் நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

முன்னதாக, ரூ. 50 ஆயிரம் வரை யிலான பயிர்க்கடன்கள் முழுமை யாக முழுமையாக தள்ளுபடி செய்யப் படுவதாக விஜய் கடந்த மே 25 அன்று அறிவித்திருந்தார். இதற்கு விவசாயிகள் கடும் அதி ருப்தி தெரிவித்தனர். தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் உள்பட பல்வேறு விவ சாயிகள் அமைப்புக்கள் போரா ட்டங்களிலும் ஈடுபட்டன. குறு, சிறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழு மையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூன் 15 அன்று வேளாண்மை, உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே, ரூ. 75 ஆயிரம் வரையிலான கடன்கள் முழு வதும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ. 75 ஆயிரத்திற்கு மேல் கடன் பெற்ற வர்களுக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ச. விஜய் அறிவித்துள்ளார்.

இதன்படி 8 லட்சத்து 33 ஆயிரத்து 773 குறு விவசாயிகளுக்கு ரூ. 3,600 கோடியும், 5 லட்சத்து 16 ஆயிரத்து 183 சிறு விவசாயிகளுக்கு ரூ. 1,995.42 கோடியும், 93,548 இதர பெரு விவசாயிகளுக்கு ரூ. 337.15 கோடியுமாக, மொத்தம் 14 லட்சத்து 43 ஆயிரத்து 504 விவசாயிகள், சுமார் ரூ. 5 ஆயிரத்து 932 கோடியே 23 லட்சம் கடன் தள்ளுபடி பயனை பெறுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுவும் முழுப்பலன் தராது; விவசாயிகள் சங்கம் அதிருப்தி

ரூ. 75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி என்ற முதல்வரின் புதிய அறிவிப்பும் முழுப்பலன் தராது என்றும், தேர்தல் வாக்குறுதிப்படி கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. (செய்தி - பக்கம் 3)