தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடிதம் மட்டும் போதாது!

2 Jul 2026, 9:53 pm
கடிதம் மட்டும் போதாது!

கடிதம் மட்டும் போதாது!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தின் போது, இடது சாரிக் கட்சிகளின் வற்புறுத்தல் காரணமாக கொண்டு வரப்பட்ட திட்டங்களில் ஒன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ஆகும். கிராமப்புற விவசாயத் தொழிலா ளர்களுக்கு பேருதவியாக இந்தத் திட்டம் அமைந்தது. ஆனால் இந்திய மக்களுக்கு நலன் பயக்கும் எந்தவொரு திட்டமும் இருக்கக் கூடாது என கங்கணம் கட்டி செயல்பட்டு வரும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி இந்தத் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக் கீட்டை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச் சுருக்கியது.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் மீது வரலாற்றுரீதியாக வன்மம் கொண்டுள்ள பாஜக ஆட்சியாளர்கள் இந்தத் திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை தூக்கினார்கள். இதற்கான எந்தவொரு காரணத்தையும் ஒன்றிய ஆட்சியாளர்களால் இதுவரை கூற முடியவில்லை. அதுமட்டுமின்றி, ஒன்றிய அரசின் முழு நிதியுதவியுடன் நடந்து வந்த திட்டத்தின் நடைமுறையை மாற்றி இந்த திட்டத்திற்கான நிதிச்சுமையை 40 சதவீதம் மாநில அரசுகள் ஏற்க வேண்டும் எனவும் விபிஜி ராம்ஜி திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது எனவும், நிதிச்சுமையை மாநில அரசு களுக்கு மடைமாற்றுவது பொருத்தமில்லை என்றும் வாதிட்டனர். ஆனால் ஒன்றிய அரசு பிடி வாதமாக மறுத்து விட்டது. இந்தநிலையில், தமிழ்நாடு உள்

இந்தநிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநி லங்களில் ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறி விக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 4.1 சதவீதமாக குறைக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு பெரு மளவு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய வில்லை.

தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல் படுத்துவதன் மூலம் மாநில அரசுக்கு கூடுதலாக 5 ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும் என்றும் ஒன்றிய, மாநில அரசுக்கிடையிலான செலவு பகிர்வு 60;40 சதவீதம் என்று கட்டாயமாக்கப்பட்டி ருப்பது பொருத்தமில்லை என்றும், மகாத்மா காந்தியின் பெயர் தொடர வேண்டுமென்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாநில அரசுகளின் கோரிக்கைகளை நியாயமாக பரிசீலிக்கும் வழக்கம் பிரதமர் மோடி க்கு ஒருபோதும் இருந்தது இல்லை. தமிழ்நாட் டின் நலன் பாதிக்கப்படும் போது வலுவாக போராடுவதற்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான அரசு முன் வரவேண்டும். இந்தி, சமஸ்கிருத திணிப்பு, நீட் தேர்வு போன்ற பிரச்சனைகளில் வலுவான குரலை தமிழ்நாடு எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.