தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாளை அமைச்சரவைக் கூட்டம் : வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை

27 Oct 2026, 9:49 pm
நாளை அமைச்சரவைக் கூட்டம் : வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை

நாளை அமைச்சரவைக் கூட்டம் : வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை

சென்னை, அக்.27 -முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக். 29 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சித்திட்டங்கள், புதிய தொழிற்கொள்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இதில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளன.

முதல்வர் விஜய் கடந்த அக்.15 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் குறைக்கடத்தி மற்றும்மின்னணுவியல் பூங்கா அமைக்கப்படும் என விதி 110-இன் கீழ் அவர் அறிவித்திருந்தார். இத்திட்டத்துக்கானமுதலீடுகள், ஊக்கத்தொகை திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் எனத் தகவல்கள்தெரிவிக்கின்றன.

புதிய தலைமைச் செயலகம்: முடிவு எதிர்பார்ப்புபட்டினப்பாக்கத்தில் 25.55 ஏக்கரில், ரூ.1,200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தவெக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதற்கு அப்பகுதி மீனவர்களும் குடியிருப்பாளர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்கள் அமைச்சரவை கூடும் அதே நாளில் (அக்.29) ஆர்ப்பாட்டம் நடத்தவும் அறிவித்துஉள்ளனர்.

இந்தச் சூழலில், பட்டினப்பாக்கம் திட்டத்தைக் கைவிட்டு, சென்னை பல்லவன் இல்லத்தில் (13.22 ஏக்கர்) புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படலாம் என அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.

நிர்வாக விவகாரங்கள்தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் அறைகளிலேயே மின்வெட்டு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்த புகார்கள், 4,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான டெண்டர், வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள், மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். கனமழையால் ஏற்பட்டுள்ள தற்போதைய பாதிப்புகள் குறித்தும் அமைச்சர்களிடம் முதல்வர் கேட்டறிவார் எனக் கூறப்படுகிறது.

சட்டம்-ஒழுங்கு, விலைவாசி உயர்வு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படலாம். கூட்டத்துக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் அல்லது முக்கியத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.