தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக நிதிநிலை அறிக்கை அரசு ஊழியர்-ஆசிரியர் ஓய்வூதிய நிதி ஒதுக்கீட்டில் ரூ.14,000 கோடி வெட்டு!

yesterday
தமிழக நிதிநிலை அறிக்கை அரசு ஊழியர்-ஆசிரியர் ஓய்வூதிய நிதி ஒதுக்கீட்டில் ரூ.14,000 கோடி வெட்டு!

தமிழக நிதிநிலை அறிக்கை அரசு ஊழியர்-ஆசிரியர் ஓய்வூதிய நிதி ஒதுக்கீட்டில் ரூ.14,000 கோடி வெட்டு!

தமிழக அரசின் 2026-2027 பட்ஜெட்டில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய நிதி ஒதுக்கீட்டில் ரூ.14,000 கோடி அதிரடியாக வெட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோரிக்கை எண் 50 என்பது மாநில அரசின் ஓய்வூதியச் செலவுகளைக் குறிப்பதாகும். முந்தைய திமுக அரசு தனது இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஓய்வூதியச் செலவுகளுக்காக ரூ.61,600 கோடியை ஒதுக்கியிருந்தது. இதில் தமிழக அரசின் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அமல்படுத்துவதற்காக மட்டும் ரூ.11,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள தவெக அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில், கோரிக்கைஎண் 50-ன் கீழ் ஓய்வூதியத்திற்காக ரூ.47,240 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், திமுகஅரசு ஒதுக்கியிருந்த ரூ.11,000 கோடி முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளதுடன், பணிக்கொடை, விடுப்புச் சரண், ஓய்வூதியப் படிகள் போன்ற செல வினங்களுக்காக மேலும் ரூ.3,000 கோடியும் குறைக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக ரூ.14,000கோடி வெட்டப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியும் ஏமாற்றமும்

தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில், “திமுக கொண்டு வந்த உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, அரசு ஊழியர் - ஆசிரியர்களின் நீண்ட நாளைய கோரிக்கையான முழுமையானபழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) பரிசீலித்து மதிப்பீடு செய்யப்படும்” என்று வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால், கடந்த 26.06.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில், “உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான விதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன; அதுஉருவாக்கப்படும் வரை இடைக்கால ஏற்பாடாக 01.01.2026 முதல் ஓய்வுபெற்றவர்களுக்கும் இறந்தவர்களுக்கும்கடைசி மாத அடிப்படைச் சம்பளத்தில் 30% அல்லது ரூ.10,000 (இதில் எது அதிகமோ அது) இடைக்காலநிவாரணமாக வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. விதிகள் உருவாக்கப்பட்ட பின்னர்தான் இதர பலன்கள்வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்மைகள் மறுப்பும் ஊழியர்களின் வருத்தமும்

இந்த அரசாணையின் மூலம் முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டமும் இல்லை, உறுதிசெய்யப்பட்டஓய்வூதியத் திட்டத்தின் முழுமையான அமலாக்கமும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. மேலும், 01.01.2026-க்கு முன்பு ஓய்வுபெற்றவர்களு க்குக் கருணை ஓய்வூதியம் வழங்குவது குறித்தும் எந்த முடிவும்அறிவிக்கப்படவில்லை. அத்துடன் பணிக்கொடை, கம்யூட்டேஷன் போன்ற பலன்களும் இப்போதைக்குக் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது. இதனால்தான் ஓய்வூதிய நிதி ஒதுக்கீட்டில் ரூ.11,000 கோடி ரத்துசெய்யப்பட்டுள்ளது. மற்ற பயன்களுக்காக ஒதுக்கப் பட்ட ரூ.3,000 கோடியும் குறைக்கப்பட்டுள்ளதன் நோக்கம் புரியவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று நம்பி வாக்களித்த அரசு ஊழியர்களும்ஆசிரியர்களும் இதனால் கடுமையான ஏமாற்றத்திலும் வருத்தத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.