முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

21 Jul 2026, 9:22 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆகஸ்ட் 5-இல் தமிழக பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அறிவிப்பு

சென்னை, ஜூலை 21 - தமிழ்நாட்டின் 2026-27ஆம் ஆண்டிற்கான திரு த்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஆகஸ்ட் 5 அன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாய கர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5 அன்று நிதி அமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டையும், ஆகஸ்ட் 6 அன்று வேளாண் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்வர். முத லமைச்சர் விஜய் தலைமை யிலான த.வெ.க அரசின் முதல் திருத்திய பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் நிகழ்வு கள் அனைத்தும் நேரலை யாக ஒளிபரப்பப்படும். அலு வல் ஆய்வுக் கூட்டத்தில் கூட்டத்தொடரின் நாட்கள் தீர்மானிக்கப்படும். தொட ர்ந்து, மானியக் கோரிக்கை கள் மீதான விவாதம் நடை பெறும் என்று பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அரசு வேலை வழக்கு: ஜூலை 24-க்குள் பதிலளிக்க உத்தரவு

சென்னை, ஜூலை 21 - முதலமைச்சர் விஜய்-யின் கரூர் பிரச்சாரத்தில் உயி ரிழந்தோர் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கு வதை எதிர்த்த வழக்கின் விசா ரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது, அரசுத் தரப்பில் பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரப் பட்ட நிலையில், இப்பணி நிய மனங்கள் நீதிமன்ற இறுதித் தீர்ப்பிற்கு உட்பட்டவை என்று கூறிய நீதிபதிகள், முதல் மாத ஊதியம் வழங் கும் முன் விசாரிக்க வேண்டி யிருப்பதால், ஜூலை 24- க்குள் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்த ரவிட்டனர். விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram