இடைத்தரகர்கள் செலவினம் முற்றிலுமாகத் தடுப்பு! நிதியமைச்சர் பதிலுரை
yesterday

இடைத்தரகர்கள் செலவினம் முற்றிலுமாகத் தடுப்பு! நிதியமைச்சர் பதிலுரை

சென்னை, ஆக. 12 -தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நிலையில், நிதி அமைச்சர் மரிய வில்சன், புதனன்று

(ஆக. 12) பதிலுரை வழங்கினார்.அப்போது நிதி முறைகேடுகளைத் தடுப்பதற்கும், சீர்திருத்தங்களுக்கும், பொதுநலநடவடிக்கைகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான புதிய அறிவிப்புகளுடன் பட்ஜெட்டை சமநிலைப்படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

இடைத்தரகர்களுக்குச் சென்ற வீணான செலவினம் தவெக அரசில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும், வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் அரசுக்கு ரூ. 15,000 கோடி கிடைக்கும்; எந்தப் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி திட்டமும்நிறுத்தப்படவில்லை எனக் கூறினார்.

திட்ட அனுமதி பெறுவதற்கான ஊழல், தவெக அரசால் தடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த மரிய வில்சன், முந்தைய அரசு மாநிலத்தின் நிதிநிலையை காரணம் காட்டி 28 மாதங்களுக்குப் பின்னரே ஒரு திட்டத்தை நிறைவேற்றியதாககூறினார்.

சொந்த வரி வருவாய் குறைப்பு?மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மதிப்பீடு 2025-26 மற்றும் 2026-27 ஆண்டுகளில் ஏன் குறைக்கப்பட்டது என்ற கேள்விக்குப் பதிலளித்த நிதி அமைச்சர், ஜூன் மாதத்தில் வெளியிட்ட வெள்ளைஅறிக்கையில் 2024-25 மற்றும் 2025-26ஆம் ஆண்டுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய்

வளர்ச்சி 8 சதவிகிதத்திற்குக் குறைவாக இருக்கும் என தெளிவாகக் கூறப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

மாநிலங்கள் மற்றும் நிதித் துறைகள் தொடர்பான நலத்திட்டச் செலவினங்களில் ரூ. 18,000 கோடி அளவிற்கு செலவினம் அதிகரித்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், முந்தைய அரசு பட்ஜெட் மதிப்பீடுகளில் 19 சதவிகித வளர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டிருந்ததாகவும், வழக்கமான வணிகச் சூழலில் 12 சதவிகிதம் மீதான மிதமான வளர்ச்சி மட்டுமே சாத்தியம் என வெள்ளை அறிக்கையில் ஏற்கெனவே குறிப்்பிட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

ஒன்றிய அரசின் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ. 12,643 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 200யூனிட் வரையிலான மின்சாரக் கட்டணச் சலுகைக்கும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ. 5,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நிதி மாற்றம் என்ற தலைப்பின் கீழ் ரூ. 18,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.