‘சட்டப்பேரவை மரபும் மாட்சிமையும் காக்கப்பட வேண்டும்’ புதிய சபாநாயகருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
12 May 2026, 11:53 pm

‘சட்டப்பேரவை மரபும் மாட்சிமையும் காக்கப்பட வேண்டும்’ புதிய சபாநாயகருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை, மே 12 - தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் தலைவராக ஜே.சி.டி. பிரபாகரும், துணைத் தலைவராக எம். ரவிசங்கரும் செவ்வாயன்று போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இந்தப் புதிய பொறுப்பேற்றுள்ள இரு வரையும் வாழ்த்தி, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலை வர்கள் சட்டமன்றத்தில் உரையாற்றினர்.

சபாநாயகர் பதவியின் வரலாற்று மரபு

சபாநாயகர் பதவிக்கு ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு எம். ரவி சங்கர் ஆகியோரைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், அவர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தற்காலிக சபாநாயகர் கருப்பையா அறிவித்தார். அவை முன்னவர் செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் புதிய சபாநாயகரின் கை களைப் பிடித்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர்.

இந்த மரபு குறித்தும் வாழ்த்தியும் பேசிய முதல மைச்சர் விஜய், “இங்கிலாந்தில் மன்னர் ஆட்சிக் காலத்தில், நாடாளுமன்றத்தின் முடிவை மன்னரி டம் தெரிவிக்கும் ‘Speaker’ (சபாநாயகர்) பதவி அபாயகரமானதாகக் கருதப்பட்டது. மன்னரின் கோபத்திற்கு அஞ்சி இப்பொறுப்பை ஏற்கப் பலர் மறுத்ததால், அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அமர வைக்கும் வழக்கம் உருவானது. அந்த ஜனநாயக மரபு இன்றும் தொடர்கிறது” எனச் சுவாரசியமான வரலாற்றை விவரித்தார். மேலும், “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” என்ற குறளை மேற்கோளிட்டு, அவையின் மாட்சிமை காக்கப்பட வேண்டும் என்றார்.

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்: உதயநிதி ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துரையில், “திமுக சட்டமன்றத்தில் எதிரிக் கட்சியாக இல்லாமல், ஒரு ஆக்கப்பூர்வ மான எதிர்க்கட்சியாகச் செயல்படும். தமிழ கத்தின் வளர்ச்சி என்று வரும்போது நாம் அனை வரும் முன்வரிசையில் நின்று உழைக்க வேண்டும்” என்றார். மேலும், முதலமைச்சர் பதவியேற்பு விழா வில் ‘வந்தே மாதரம்’ பாடப்பட்ட விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய அவர், ஆளுநர் உரையின்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய தவறு மீண்டும் நிகழக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

சம வாய்ப்பு வழங்கத் தலைவர்கள் கோரிக்கை

புதிய சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர் களும் கோரிக்கை விடுத்தனர்:

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): “தராசு போல் நடுநிலையோடு செயல்பட்டு, எதிர்க்கட்சி யினருக்குப் பேசப் போதிய நேரம் ஒதுக்க வேண்டும்.”

ஆர். செல்லசுவாமி (சிபிஐ-எம்): “மதச் சார்பின்மை கொள்கையை உயர்த்திப் பிடித்து, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.”

டி. ராமச்சந்திரன் (சிபிஐ): “மாநில உரிமை களைப் பாதுகாக்க வேண்டும்; ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரம் வழங்க வேண்டும்.”

வன்னி அரசு (விசிக): “சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களின் குரல் சபையில் ஒலிக்கச் செய்ய வேண்டும்.

ராஜேஷ் குமார் (காங்கிரஸ்) & சௌமியா அன்புமணி (பாமக): “அரசியல் சாசனத்தின் மாண்பைப் பாதுகாத்து, சமூக நீதியுடன் அவையை நடத்த வேண்டும்.”

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): “நேரலையின் போது எதிர்க்கட்சிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.”

சபாநாயகரின் உறுதிமொழி

தலைவர்களின் வாழ்த்துகளுக்குப் பதிலளித் துப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “எந்தக் கட்சிக்கும் சார்பின்றிச் செயல்படுவேன். தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, தமிழ் மொழிக்கும் நடுநிலைமைக்கும் முதலிடம் அளித்து அவையின் மரபைக் காப்பேன்” என்று உறுதியளித்தார். துணைத் தலைவர் ரவிசங்கர் பேசுகையில், எதிர்க்கட்சிகள் எல்லை கடக்கா மல் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.