சட்டமன்றம் ஜூன் 18-இல் கூடுகிறது!
5 Jun 2026, 8:52 pm
<p><strong>சட்டமன்றம் ஜூன் 18-இல் கூடுகிறது!</strong></p><p>சென்னை, ஜூன் 5 - தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம், ஜூன் 18-ஆம் தேதி கூட உள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 18-ஆம் தேதி (வியாழக் கிழமை) அன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரை நிகழ்த்த உள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தி பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.</p>
