தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நூறுநாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும்! முதல்வரிடம் விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

5 Jun 2026, 9:16 pm
நூறுநாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும்! முதல்வரிடம் விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

நூறுநாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும்! முதல்வரிடம் விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 5 - நூறுநாள் வேலை திட்டத்தை தொடர்ந்து அமல் படுத்தக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டு மென்று தமிழ்நாடு விவ சாயத் தொழிலாளர் சங்கத் தின் பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யை செவ்வாயன்று (ஜூன் 2) தலைமைச் செயலகத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்ன ணியின் ஒருங்கிணைப் பாளர் கே.பாலகிருஷ்ணன், விதொச பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் உள்ளிட் டோர் சந்தித்துப் பேசினர்.

அதன்பின் செய்தியாளர் களிடம் பேசிய அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செய

லாளர் வீ.அமிர்தலிங்கம் கூறுகையில், “தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு (நூறுநாள் வேலை) திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்துவிட்டு, விபி ஜிராம்ஜி என்ற திட்டத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்த உள்ளது. இதனால் வேலை உரிமை என்பது பறிபோகும்.

எனவே, நூறுநாள் வேலை திட்டத்தை தொடர்ச்சியாக செயல்படுத் தக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இத்திட்டத்தில் கருவிழிகளை ஸ்கேன் செய்யும் முறையை ஒன்றிய அரசு கைவிட மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்” என்றார்.

ஐக்கிய விவசாயிகள் முன் னணியின் ஒருங்கிணைப்பா ளர் கே.பாலகிருஷ்ணன் கூறு கையில், “ஒன்றிய அரசு அறி வித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைக்கும், சாமி நாதன் குழு பரிந்துரைத்த அளவிற்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளது. இதை எதிர்த்து விவசாயிகள் நாடு முழுவதும் போ ராட்டம் நடத்தி வருகின்ற னர்.

இதனை சரிசெய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலி யுறுத்தினோம்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.