மேகதாது அணைக்கு எதிராக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம்
18 Jun 2026, 10:04 pm

மேகதாது அணைக்கு எதிராக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம்

சென்னை, ஜூன் 18 - தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மேகதாது அணைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தும் வகையில், தமிழக சட்டமன்றத்தில், வெள்ளிக்கிழமையன்று தனித்தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

இந்த தீர்மானத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்மொழிகிறார்

. மேகதாது அணை விவகாரத்தில், விரைவாக முடிவு எடுத்து ஒப்புதல் வழங்கவேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பிரதமர் மோடியிடமும், ஜல்சக்தி மந்திரி சி.ஆர். பட்டேலிடமும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக அரசு வெள்ளிக்கிழமையன்று சட்டமன்றத்தில் கொண்டு வரும் தனித்தீர்மானம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காவிரி படுகையில் எந்த இடத்திலும் புதிய நீர்தேக்கத் திட்டத்தை மேற்கொள்ளக்கூடாது என தனித்தீர்மானத்தில் தமிழக அரசு வலியுறுத்த உள்ளது.