தீக்கதிர் முக்கிய செய்திகள்
11 Jun 2026, 9:21 pm

நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும்! அமைச்சர் அருண்ராஜ் தகவல்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆர். அருண் ராஜ் அறிவித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் செய்தியாளர் களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார். நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்பதே தவெக அரசின் திட்டவட்ட மான கொள்கை என்று உறுதிப்படுத்திய அமைச்சர், ‘ஒரே நாடு, ஒரே தேர்வு’ போன்ற கொள்கைகள் மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகளை பறிப்பதாக விமர்சித்தார். மருத்துவம் மற்றும் கல்வி மாநிலப் பட்டியலின் கீழ் வர வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நீட் முறை ஏழை மற்றும் கிராமப் புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு களைப் பறிப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இந்த விழாவில் தமிழகம் முழு வதும் பணியாற்றும் 8,400க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர் களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும், 250 மருத்துவப் பயனாளர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற இலக்கை அடைய மருத்துவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்ப டும் என்றும், மருத்துவர் களுக்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கவுன் சிலிங் வெளிப்படையாக நடைபெறும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

மேட்டூர் அணையில் இன்று நீர் திறப்பில்லை!

சென்னை: குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று மேட்டூர் அணையி லிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு போதிய நீர் இல்லாததன் காரணமாக, இன்று (ஜூன் 12) அணை திறக்கப் படாது என்று தமிழக நீர்வளத்துறை அறிவித்து உள்ளது.