பேரவை நேரலை, அவை மரபு: எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி மோதல்
yesterday
<p><strong>பேரவை நேரலை, அவை மரபு: எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி மோதல்</strong></p><p>சென்னை, ஆக. 21-அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் ஆளுங்கட்சியினரின் ஆதாரமற்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் ரீல்களாக வெளியாவதாக உதயநிதி ஸ்டாலின் கவலை தெரிவித்தார்; அவைக் குறிப்பிலிருந்து நீக்கினாலும் ரீல்கள் மூலம் அதிகம் பகிரப்படுவதால் நீக்கம் அர்த்தமற்றதாகிறது என்றார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 2021 தேர்தல் அறிக்கையில் பேரவையை நேரலை செய்வதாக வாக்குறுதி அளித்தும் திமுக அதைச் செய்யவில்லை எனவும், ஜனநாயகத்தைக் காக்க வரலாற்றில்முதன்முறையாகத் தவெக நேரலை செய்வதாகவும் கூறினார். மறுப்பாக உதயநிதி, கேள்வி–பதில் நேரத்தையும்சட்டமன்ற நிகழ்வுகளையும் முதன்முதலில் நேரலை செய்தது திமுக ஆட்சியில்தான் என்றார். அமைச்சர்ராஜ்மோகன், நேரலை ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இல்லாமல் முழுமையாக இருக்க வேண்டும் என்றார்.பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், இரு தரப்பினரும் ஆதாரத்துடன் பேச வேண்டும் எனவும், ஆதாரமற்ற கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவது அவைமரபு எனவும் கூறி, அவைக் குறிப்பு நீக்கத்தை வீடியோவாகப் பதிவிட்டால் அத்தகையோர் மீதும் சமூக ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அமைச்சர்கள் திடீரென எழுந்து பேசுவது நியாயமா எனக் கேட்க, முதலமைச்சர் குறித்துப் பேசும்போது அமைச்சர் எழுந்து பதிலளிப்பது இயல்பே எனச்சபாநாயகர் பதிலளித்தார்.</p>
