தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் நிகழ்வுகள் ஜோசப் விஜய் - உதயநிதி பரஸ்பரம் வணக்கம்
11 May 2026, 10:21 pm

தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் நிகழ்வுகள்

ஜோசப் விஜய் - உதயநிதி பரஸ்பரம் வணக்கம்

சென்னை, மே 11 - தமிழ்நாடு 17-ஆவது சட்டப்பேர வையின் முதல் கூட்டத்தொடர் திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு கூடியது. கூட்டம் துவங்குவதற்கு முன்பாகவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்குள் வந்து விட்டார். அவருடன் திமுக சட்ட மன்றத் துணைத் தலைவர் கே.என். நேரு, எதிர்க்கட்சி கொறடா எ.வ. வேலு, மூத்த உறுப்பினர்கள் ஐ. பெரிய சாமி, அர. சக்கரபாணி ஆகியோரும் உடன் வந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் வருகை தந்த சில நிமிடங்களுக்கு பின்னர் ஜோசப் விஜய் முதலமைச்சராக சட்டப் பேரவைக்குள் நுழைந்தார். அப்போது அவைக்குள் இருந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர் களும் அவருக்கு மரியாதை நிமித்த மாக வணக்கம் செய்தனர். அப்போது உதயநிதியும் வணக்கம் செய்தார். அவருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் பரஸ்பரம் வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டார்.

அதேபோல், சட்டமன்ற உறுப்பி னர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட போது முன்னாள் முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் முதலமைச்ச ருக்கு வணக்கம் வைத்தனர்.

பிரேமலதா விஜயகாந்த்

திமுக கூட்டணி சார்பில் விருத்தா சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரேமலதா விஜய காந்த், எம்எல்ஏவாக பதவியேற்றார். நுழைவாயிலை தொட்டு வணங்கி விட்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்த அவர், முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டா லின் ஆகிய இருவருக்கும் வணக்கம் செலுத்தினார்.

அப்போது, முதலமைச்சர் விஜய் எழுந்து நின்று திருப்பி வணக்கம் செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர். செல்ல சுவாமி, டி. லதா ஆகிய இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி யேற்றதும் முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தனர்.

பாக்கெட்டில் ஜெ. புகைப்படம்

தவெக-வைச் சேர்ந்த செங்கோட் டையன் கோபிச்செட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏவாக ‘கடவுளின் பெயரால்’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அவர் தனது சட்டைப் பையில் மறைந்த முன்னாள் முதல மைச்சர் ஜெயலலிதாவின் புகைப் படத்தை வைத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

திமுக மரபில்  ஓ. பன்னீர்செல்வம்

இந்த முறை பதவியேற்பில் ஓ. பன்னீர்செல்வம் வழக்கமாக கடைப் பிடிக்கும் ‘கடவுளின் பெயரால்’ என்பதை தவிர்த்து, திமுகவின் மரபுப் படி ‘உளமார’ என்று உறுதிமொழி ஏற்றார். வழக்கமாக அவர் சட்டைப் பையில் இடம்பெறும் ஜெயலலிதா படத்திற்கு பதில் இம்முறை மு.க. ஸ்டாலின் படம் இடம்பிடித்தது.

‘கண்கலங்கிய’ பண்ருட்டி எம்எல்ஏ

17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் இடைக்கால அவைத் தலைவர் சோழவந்தான் கருப் பையா, உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்த வரிசையில் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ மோகனை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் பதவி ஏற்க வருமாறு அழைத்தார். இருக்கையி லிருந்து எழுந்து வந்த மோகன் பதவி யேற்கும்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை நோக்கி கண்கலங்கி அழுதார். ‘மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா’ என்று உணர்ச்சியோடு கூறியபடியே பதவியேற்றுக் கொண்டார்.

மண்டியிட்டு வணங்கிய எம்எல்ஏ

சேலம் தெற்குத் தொகுதியில் வெற்றிபெற்ற தமிழன் பார்த்திபன் சட்டப் பேரவை நுழைவாயிலில் மண்டி யிட்டு வணங்கியபின் உள்ளே சென்றார். இந்த செயல் பலரின் கவனத்தை கவர்ந்தது.

கட்டிய தழுவிய வி.எஸ்.பாபு

கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ வி.எஸ். பாபு, முதல மைச்சர் விஜய்யை ஆரத்தழுவி விட்டு, எம்எல்ஏ-வாக பதவியேற்றுக் கொண்டார்.

சவுமியா அன்புமணி பதவியேற்பு

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சவுமியா அன்புமணி முதல்முறையாக சட்ட மன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். இது அவரது அரசியல் வாழ்வில் முதல் சட்டமன்ற பதவி யேற்பு என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் முதல்முறையாக ஒரே வரிசையில் திமுக - அதிமுக

திமுக மற்றும் அதிமுக உறுப்பினர் கள், தமிழக சட்டமன்ற அர சியல் வரலாற்றில் முதல்முறையாக, எதிர்க்கட்சி வரிசையில் அருகருகே அமர்ந்திருக்கின்றனர். 1967-இல் திமுக, 1977-இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சி புரிந்த நிலையில் இப்போது புதிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தொ டர்ந்து இரண்டாவது முறையாக அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்வ தும் இதுவே முதல்முறை.

பதவியேற்காமல் சென்ற சி.வி. சண்முகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மட்டும் தனி யாக சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணி தலைமையிலான குழுக்களுடன் சேரவில்லை. அவரை எம்எல்ஏ பதவியேற்புக்காக சட்டப்பேரவை தலைமைச் செயலாளர் சீனிவாசன் அழைத்தபோது அவர் அங்கு இல்லை. ஏற்கெனவே பேரவை யிலிருந்து சென்றுவிட்டிருந்தார். அவர் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று விட்டது பின்னர் தெரிய வந்தது. பிற்பகலில் சபாநாயகர் அறையில் பதவியேற்றார்.

‘உளமார’வுக்கு மாறிய முதலமைச்சர் விஜய்

ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சராக பதவியேற்ற போது சி. ஜோசப் விஜய் ‘ஆண்டவன் பெயரால்’ என்று கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். மதச் சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட நாட்டில், இவ்வாறு ஆண்டவன் பெயரால் உறுதிமொழி ஏற்றது, பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. விமர்சனங்களுக் கும் எழுந்தன. இந்நிலையில், திங்கட்கிழமையன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது பாணியை மாற்றிக்கொண்டார். ‘உள மார’ என்று கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். வழக்கமாக திமுகவினர் பயன்படுத்தும் ‘உளமார’ என்ற சொல் மதச்சார்பற்ற ஆட்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. இருப்பினும் தவெகவின் பெரும்பா லான எம்எல்ஏ.க்கள் ‘கடவுளின் பெயரால்’ என்றே பதவி யேற்றனர்.

கடவுள் அறிய உறுதி கூறி பதவியேற்றவர்கள்

அருண்ராஜ் (தவெக, திருச்செங்கோடு), செங்கோட்டையன் (தவெக, கோபிச்செட்டிபாளையம்), வெங்கட்ரமணன் (தவெக, மயிலாப்பூர்), நிர்மல்குமார் (தவெக, திருப்பரங்குன்றம்), ராஜ்மோ கன் (தவெக, எழும்பூர்), டி.கே. பிரபு (தவெக, காரைக்குடி), இபிஸ் (அதிமுக, எடப்பாடி), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக, கலசப்பாக்கம்), அன்பழகன் (அதிமுக, பாலக்கோடு), ஜேசிடி பிரபாகர் (தவெக, ஆயிரம் விளக்கு), அரி (அதிமுக, திருத்தணி), அருள்விக்னேஷ் (தவெக, கள்ளக்குறிச்சி), ஆனந்த்மோகன் (தவெக, ஈரோடு), இசக்கிசுப்பையா (அதிமுக, அம்மை), ரஞ்சித்குமார் (தவெக, காஞ்சிபுரம்) உள்ளிட்ட பலரும் கடவுள் அறிய எனக் கூறி உறுதியேற்றனர்.

உளமார உறுதி கூறி பதவியேற்றவர்கள்

உறுதிமொழியின் போது, ‘உளமாற உறுதி கூறுகிறேன்’ என்றும், ‘கடவுள் அறிய உறுதி கூறுகிறேன்’ என்றும் இரண்டு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி ஒன்றை தேர்ந்தெடுத்து பதவியேற்றனர். இடது சாரிக் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பி னர்கள் அனைவரும் ‘உளமார’ என்று கூறி உறுதியற்றனர். முதலமைச்சர் விஜய் (தவெக, பெரம்பூர்), ஆனந்த் (தவெக, தி. நகர்), ஆதவ் அர்ஜுனா (தவெக, வில்லிவாக்கம்), உதயநிதி ஸ்டாலின் (திமுக, சேப்பாக்கம்), ஓ. பன்னீர்செல்வம் (திமுக, போடி நாயக்கனூர்), அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக, திருச்செந்தூர்), ரவிசங்கர் (தவெக, துறையூர்), அசோக்குமார் (திமுக, பேரா வூரணி), அண்ணாதுரை (திமுக, பட்டுக்கோட்டை), அப்துல் வஹாப் (திமுக, பாளையங்கோட்டை), அபிஷேக் (தவெக, போளூர்), அய்யனார் (தவெக, நிலக்கோட்டை), அருண்குமார் (தவெக, திரு வள்ளூர்), அருண்மொழிதேவன் (அதிமுக, புவனகிரி), கே.கே.எஸ்.ஆர். ராமசந்திரன் (திமுக, அருப்புக்கோட்டை), சி.வெ. கணே சன் (திமுக, திட்டக்குடி), அருள்பிரகாசம் (தவெக, சைதாப்பேட்டை), ஆஸ்டின் (திமுக, கன்னியாகுமரி).

சட்டப்பேரவைத் தலைவராகிறார் தவெக எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர்

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைந்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். பேரவையின் தற்காலிக தலைவர் கருப்பையா தலைமையில் பேரவைக் கூட்டம் நடந்தது.

இந்நிலையில், சட்டமன்றப் பேரவை தலைவர் பதவிக்கு தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். துணைத் தலைவர் பதவிக்கு திருச்சி மாவட்டம், துறையூர் (தனி) தொகுதி எம்எல்ஏ ரவி சங்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ஜேசிடி பிரபாகர் தமிழக வெற்றி கழகத்தில் தேர்த லில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

சட்டப்பேரவை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் மனு செய்யவில்லை. இதனால் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். செவ்வாய்க்கிழமை (மே 12) காலை 9:30க்கு சட்ட மன்றம் கூடுகிறது. அப்போது தலைவர், துணைத் தலை வர் தேர்வு செய்யப்பட்டதை தற்காலிக தலைவர் கருப் பையா முறைப்படி அறிவிப்பார்.

அதைத்தொடர்ந்து, சட்டமன்ற மரபுப்படி முத லமைச்சர் சி. ஜோசப் விஜயும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் பேரவை தலைவர் ஜேசிடி பிர பாகரை தலைவர் இருக்கையில் அமர வைப்பார்கள். பின்னர், புதிய தலைவர் ஜேசிடி பிரபாகர் சட்டமன்ற அலுவல்களை நடத்துவார்.