தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்றத் தேர்தலில் வைப்புத்தொகை இழந்த 3,352 வேட்பாளர்கள்

10 May 2026, 11:09 pm
சட்டமன்றத் தேர்தலில் வைப்புத்தொகை இழந்த 3,352 வேட்பாளர்கள்

சட்டமன்றத் தேர்தலில் வைப்புத்தொகை இழந்த 3,352 வேட்பாளர்கள்

சென்னை, மே 10 - தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 4,023 வேட்பாளர்களில் 3,352 பேர் அதாவது, 83 சதவீதத் திற்கும் அதிகமானோர் வைப்புத் தொகையை இழந்துள்ளனர் என தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ மாக அறிவித்துள்ளது.

இந்த புள்ளிவிவரம் சிறிய கட்சி களும் சுயேச்சை வேட்பாளர்களும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்கொள் ளும் சவால்களை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

கோடீஸ்வரர்களும் வழக்குகளும் தமிழக சட்டமன்றத்தில் தற்போ துள்ள 233 எம்எல்ஏக்களில் நால்வரில் ஒருவர் மீது தீவிரமான கிரிமினல் வழக்கு இருப்பதாக வேட்புமனுத் தகவல்களின் அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கிரிமினல் வழக்குகள் கொண்ட எம்எல்ஏக்கள் அதிகம் கொண்ட கட்சியாக தவெக முதலிடத்தில் உள்ளது.

தவெகவின் 107 எம்எல்ஏக் களில் 41 பேர் மீது கிரிமினல் வழக்கு கள் உள்ளன; அடுத்த இடங்களில் திமுக (37 பேர்), அதிமுக (33 பேர்) ஆகியன உள்ளன.

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறக்கூடிய குற்றங்கள், கொலை, கொலை முயற்சி, கடத்தல், கற்பழிப்பு, ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தீவிர வழக்குகளாக வகைப்படுத்தப்படு கின்றன.

அந்த வகையிலும் தவெக 19 பேருடன் முதலிடத்தில் உள்ளது.

வெற்றிப் பெற்ற 233 எம்எல்ஏக்களில் 193 பேர் கோடீஸ்வரர் கள்; தவெகவில் மட்டும் 77 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தகவல்களின் படி தெரியவந்துள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதி ராஜினாமா! நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவர் முதலமைச்சராக பொறுப் பேற்று நிர்வாக பணிகளை மேற் கொண்ட நிலையில், முறைப்படி திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜி னாமா செய்துள்ளார்.

இதற்கான கடி தத்தை சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் கி. சீனிவாசனிடம், அமைச் சர்கள் செங்கோட்டையன், வெங்கட் ராமன் ஆகியோர் வழங்கினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.